Advertisment

நீட் தேர்வு சோகம்: ஒரு நாளில் மூன்று மாணவர்கள் பலி

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக, ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
நீட் தேர்வு சோகம்: ஒரு நாளில் மூன்று மாணவர்கள் பலி

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக, ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisment

நீட் (NEET) தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி (நாளை ) நடைபெறுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நீட் தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இது, தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 3843 தேர்வு மையங்கள் மூலமாக 15.9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தேர்வு குறித்த மன அழுத்தம்  இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தருமபுரி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஆதித்யா என்ற மாணவரும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவரும் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்டார். இதுவரை, தமிழகத்தில் மாணவி அனிதா உள்ளிட்ட  ஏழு மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

ஜோதிஸ்ரீ துர்கா மரணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்" என்று ஆறுதல் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின், " திமுக ஆட்சியில் நீட்  தேர்வு ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி" என்று தெரிவித்தார்.

 

மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ளும் இத்தகைய போக்குகளை முற்றாகக் கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

 

கொரோனாவை விடக் கொடியதாக இருக்கிறது நீட் தேர்வு . நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவுகள் மட்டுமில்லை, அவர்களும் மடிந்து கொண்டே இருக்கின்றனர் என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.

நீட் தேர்விற்காக மாணவர்கள் தற்கொலை செய்வது துரதிஷ்டமானது. தற்கொலையை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரீகத்தின் உச்சக் கட்டம். தமிழ் நாட்டில் எத்தனையோ காதல் தோல்வி காரணமாக தற்கொலை நடக்கின்றன. அப்படியெனில் காதலிப்பது குற்றமா? காதல் செய்பவர்கள் தண்டனைக்குரியவர்களா? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment