நீட் தேர்வு தொடர்பான முறைகேடுகள் சமிப காலமாக அனைவராலும் பேசப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கே.வி உதித் சூர்யா, முகமது இர்பான் போன்றோர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்தாலும், இந்த முறைகேடுகளில், காவல் துறையினரின் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர், என்ற சென்னை உயர்நீதிமன்றமும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது ( அக்டோபர் 15 சென்னை உயர்நீதிமன்றம்)
Advertisment
இதுவரை, காவல் துறையினர் ஒரே ஒரு நீட் ஏஜண்டை மட்டும் கைது செய்துள்ளனர். உதித் சூரியாவிற்க்காக தேர்வெழுதிய மாணவரின் மீதும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடலோர மாவட்டங்களை மிரட்ட காத்திருக்கும் வடகிழக்கு பருவமழை :
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி( அரசு உதவி பெறும் ) டீன்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களின் கட்டை விரல் முத்திரையின் மூன்று மாதிரிகளை சேகரிக்குமாறு கோரியுள்ளது. டீன் அலுவலகத்தில் வைத்து உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் பேராசிரியர்களுக்கு முன்னால் மாணவர்களின் கைவிரல் முத்திரை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. படிவங்களின் இரண்டு பிரதிகள் சீல் செய்யப்பட்ட கவரில் அடுத்த ஐந்து நாட்களுக்குள் மருத்துவக் கலவி இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டு, கைரேகை நிபுணர்களால் ஆராயப்பட உள்ளது.
இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் போது பதிவு செய்யப்பட்ட கட்டை விரல் ரேகையும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கை ரேகையும் ஒன்றாக உள்ளதா ? என்ற அறிவியல் ரீதியாக பதில் தேட தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது
கட்டை விரல் முத்திரையை பதிவு செய்யாத மாணவர்கள், குறிப்பாக அன்று விடுமுறை எடுக்கும் மாணவர்களும் வரும் காலங்களில் வகுப்பிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அந்த சுற்றறிக்கை கூறுகிறது.