/tamil-ie/media/media_files/uploads/2019/09/neet-fraud-udit-surya-theni-medical-college.jpg)
Neet impersonation case high court madurai bench granted bail udit surya - நீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு!
தேனியை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்விற்காக ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக அவர் படித்த கல்லூரி முதல்வர் எடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடைய பெற்றோர்கள் திருப்பதியில் கைது செய்யப்பட்டு, சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் இதுபோன்று மோசடி செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை இன்று விசாரித்த செய்த நீதிமன்றம், உதித் சூர்யாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
அவர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பு ஆஜராகும்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசயமம் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால் வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் தீட்டப்பட்டதுபோல் இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.