NEET impersonators photos will be displayed : தமிழகத்தின் நீட் தேர்வின் போது ஆள்மாறாட்டம் நடைபெற்றது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எங்கெங்கு ஆள்மாறாட்டங்கள் நடைபெற்றது என்பதை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது. தற்போது வரை ஒன்பது மாணவர்கள் ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு யூ.ஜி மற்றும் பி.ஜி மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் தான் உதவி செய்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Advertisment
வானத்தை தொட்ட வெங்காய விலை
இவர்களை கண்டுபிடிப்பதற்ஆக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இந்த 9 மருத்துவ மாணவர்களின் புகைப்படங்கள் ஒட்ட இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தார் கிரைம் பிரான்ச் சி.ஐ.டி. எஸ்.பி. சி. விஜயகுமார். அவரின் வேண்டுகோளை தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இவர்களின் புகைப்படங்கள் ஒட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
நாங்கள் விசாரணையை மேலும் துரிதப்படுத்தினால் மட்டுமே இந்த மாணவர்களை கண்டுபிடிக்க முடியும் என்று காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. மூன்று மாதங்களுக்கு மேல் ஆன போதும் இந்த தேர்வினை எழுதிய மாணவர்கள் யார் என்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு வேளை கல்லூரி முதல்வர்களால் இவர்களை அடையாளம் காண இயலவில்லை என்றாலும் இதர மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் இவர்களை அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கையில் இந்த வேண்டுகோளை முன் வைத்தோம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.