நீட் தேர்வு ’அநீதி’யானது – தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி

‘NEET an injustice,’ TN Cong urges CM Stalin’s intervention: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் படிக்கும் சமூகத்தில் பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள், பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பட்டியல் சாதியினர் போன்றவர்கள் நீட் தேர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், என்று அழகிரி கூறினார்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட “அநீதியை” நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்களன்று சென்னையில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் படிக்கும் சமூகத்தில் பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள், பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பட்டியல் சாதியினர் போன்றவர்கள் நீட் தேர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், என்று அழகிரி கூறினார்.

எவ்வாறாயினும், சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படிக்க அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள், இது “அநீதி” என்று அவர் கூறினார்.

NEET க்கு மாற்றாக, அளவுகோல்களை நிர்ணயிக்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும். மேலும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலினை அழகிரி வலியுறுத்தினார்.

தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களில் கல்லூரிகளில் சேருவதற்கு, பள்ளி மதிப்பெண்களை வழங்க ஒரு குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  

தரவுகளை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைவர் அழகிரி, 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில், அரசு நடத்தும் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 700 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர்களில் ஒன்பது பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது.

NEET தேர்வின் காரணமாக கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது, என்று அவர் ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்சினையை தீர்க்க உதவுவதற்காக மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் படித்த 405 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது, அதே நேரத்தில் சுமார் 3,000 (அரசுத் துறை) இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பிற தனியார் பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களுக்குச் சென்றன, என்றார்.

“இந்த அநீதியை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது, அதே நேரத்தில், தமிழக அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவது காலத்தின் தேவை.” எனவே, நீட் காரணமாக ஏற்பட்ட “அநீதியை” நீக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அழகிரி வலியுறுத்தினார்.

தமிழகத்தில் 5,550 எம்பிபிஎஸ் இடங்களில், அரசுத் துறையில் 3,600 இடங்களும், தனியார் துறையில் 1,950 இடங்களும் உள்ளன. 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் மாநிலத் துறையில் இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் கூடுதலாக 1,650 இடங்களைக் கொண்டுவரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neet injustice tn cong stalins intervention

Next Story
டிடிவி புள்ளி வைக்க… சசிகலா கோலம் போட… அதிமுக வை உலுக்குமா ஆகஸ்ட் கச்சேரி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com