Advertisment

நீட் தேர்வு ரிசல்ட் விவகாரம்; நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு திட்டம்

நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு; நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

author-image
WebDesk
New Update
neet exam center 2024

நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு; நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீட் தேர்வு (NEET-UG 2024) முடிவுகள் சர்ச்சையாகியுள்ள நிலையில், கருணை மதிப்பெண், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள், பொதுத் தேர்தல் முடிவுகள்  வெளியான ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 67 மாணவர்கள் முழுமையான 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். இதில் 6 பேர் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சில மாணவர்களுக்கு மதிப்பெண் முறைகளின்படி சாத்தியமில்லாத 718, 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், வினாத்தாள் கசிவு தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் வெளிவந்தன. சில மாணவர்கள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய 'கிரேஸ் மார்க்ஸ்' வழங்குவது உட்பட, செயல்முறை நியாயமானது மற்றும் வெளிப்படையானது என்பதை நிரூபிக்க, தேசிய தேர்வு முகமையின் (NTA) மதிப்பீட்டு முறைகளை பகிரங்கப்படுத்த அழுத்தம் கொடுக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தேசிய தேர்வு முகமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

720 மதிப்பெண்களுக்கு 650 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கூட இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் போகலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான தேசிய தேர்வு முகமையின் தன்னிச்சையான முடிவு பரவலான முறைகேடுகளை ஏற்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். 720/720 மதிப்பெண்களுடன் 67 மாணவர்கள் இருந்தனர். 2020 முதல், முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். கருணை மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர், நீட் தேர்வில் இது சாத்தியமற்றது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் நிபுணர்களுடன் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்,'' என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

நீட் தேர்வு முடிவுகளில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மூன்று முக்கிய முரண்பாடுகளை குறிப்பிடுகின்றனர்.

வினாத்தாள் கசிவு புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறைந்தது மூன்று வினாத்தாள் கசிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. போலீஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

அடுத்து ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 தேர்வர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு குறிப்பேட்டில் கருணை மதிப்பெண் குறித்த தகவல் எதுவும் இல்லை. ஆனால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர இழப்பைக் கருத்தில் கொண்டு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

2018 தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட பொறிமுறையின்படி, தேர்வு நேர இழப்பைக் கண்டறியவும், அவர்களின் "பதிலளிக்கும் திறன்" மற்றும் "இழந்த நேரம்" ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் மூலம் இழப்பை ஈடுசெய்யவும் ஒரு குறை தீர்க்கும் குழுவை அமைத்ததாக தேசிய தேர்வு முகமை கூறுகிறது. 

ஆனால், “ஒன்று, குறிப்பேட்டில் அத்தகைய ஏற்பாடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரண்டு, மாணவர்கள் கேள்வி எழுப்பியதற்காக மட்டுமே கருணை மதிப்பெண்களை தேர்ந்தெடுத்து வழங்குவது நியாயமற்றது. மேலும் மூன்று, தேசிய தேர்வு முகமை, முழு கணினிமயமாக்கப்பட்ட கிளாட் (CLAT) தேர்வுக்காக நிறைவேற்றப்பட்ட ஆறு வருட உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னால் மறைந்துள்ளது, அதேசமயம் நீட் தேர்வு பேனா மற்றும் காகிதத் தேர்வாகும்" என்று மூத்த வழக்கறிஞர் பி வில்சன் கூறினார்.

பெரும்பாலான மாணவர்கள் எந்த வரிசையிலும் கேள்விகளுக்கு பதிலளிக்காததால், பதிலளிக்கும் திறனைத் தீர்மானிக்கப் பயன்படுத்திய சரியான சூத்திரத்தை தேசிய தேர்வு முகமை விளக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். "அத்தகைய தேர்வர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் -20 முதல் 720 மதிப்பெண்கள் வரை மாறுபடுகிறது. கருணை மதிப்பெண்கள் பெற்ற ஆறு மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இரண்டு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் 718 மற்றும் 719 மதிப்பெண்களாக மாறியுள்ளது" என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment