Advertisment

நீட் விலக்கு மசோதா; தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா; தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல்

author-image
WebDesk
New Update
MK Stalin

மு.க. ஸ்டாலின்

NEET UG 2022: Centre seeks clarifications from Tamil Nadu govt on anti-NEET bill: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) இருந்து தமிழக மாநில மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Advertisment

நீட் (NEET) தேர்வு என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான பொதுவான தகுதித் தேர்வாகும். இது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இ.பி.எஸ் கடிதத்தை ஏற்ற வங்கிகள்: ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவு

ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. மேலும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கலாம் என்றும் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியதாவது: இந்தியக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காகவும் ஒப்புதலுக்காகவும் தமிழக ஆளுநரால் அனுப்பப்பட்ட 'இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தமிழ்நாடு சேர்க்கை மசோதா, 2021' என்ற மசோதா, மே 2, 2022 அன்று உள்துறை அமைச்சகத்தால் பெறப்பட்டது.

நடைமுறைப்படி, குடியரசுத் தலைவரின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக மாநிலங்களின் ஆளுநர்களால் ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசித்து உள்துறை அமைச்சகத்தில் செயலாக்கப்படும் என்று அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறினார்.

அதன்படி, நீட் விலக்கு மசோதா தொடர்பான மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசனை செயல்முறை தொடங்கப்பட்டதாக அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறினார்.

“சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் தங்கள் கருத்துகள் மற்றும் விளக்கங்களுக்காக முறையே ஜூன் 21, 2022 மற்றும் ஜூன் 27, 2022 அன்று தமிழ்நாடு அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட மசோதாவில் தமிழக அரசின் 'கருத்துகளை' கேட்டுள்ளன" என மக்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடையே ஆலோசனை செய்யும் செயல்முறைக்கு அதிக நேரம் தேவைப்படும், எனவே அத்தகைய ஒப்புதலுக்கு நிலையான நேரத்தை பரிந்துரைக்க முடியாது என்று அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறினார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை கடந்த ஆண்டு ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, அதை தமிழக அரசு பிப்ரவரியில் இரண்டாவது முறையாக நிறைவேற்றியது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி 2021 செப்டம்பரில் இந்த மசோதா முதலில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment