நெல்லை - சென்னை இடையே தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரயில் பயணிகள் இடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ள சிறப்பு வசதிகள் என்னென்ன தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை (24.09.2023) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலின் ஏசி சேர் கார் கோச், மற்றும் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கோச் என மொத்தம் 8 கோச்க்கான டிக்கெட் முன்பதிவு காத்திருப்புப் பட்டியல் 3 உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில், சென்னை - நெல்லை இடையேயான தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து செல்லும். இது மற்ற வழித்தடங்களில் செல்லும் ரயில்களை விட வேகமாக செல்லும். சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு மீதமுள்ள வாரத்திற்கான காத்திருப்புப் பட்டியல் 44 முதல் 50 வரை உள்ளது. அடுத்த திங்கட்கிழமை முதல் இருக்கைகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முதல் பிரீமியம் ரயில் சேவையாகவும், மாநிலத்தில் இயக்கப்படும் மூன்றாவது பிரீமியம் ரயில் சேவையாகவும் இந்த வந்தே பாரத் ரயில் இருக்கும்.
இந்த சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 02666), திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் 650 கிமீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) இதுவரை ஐந்து வந்தே பாரத் ரயில்களுக்கு 16 பெட்டிகளை தயாரித்துள்ளது. இதில், புது டெல்லி-வாரணாசி மற்றும் புது டெல்லி-கத்ரா ரயில்கள் 2018-19 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட முதல் மாதிரி ரயில்கள் ஆகும்.
அதன்பிறகு, சிறிய மாற்றங்களுடன் வந்தே பாரத் 2.0 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு காந்திநகர்-மும்பை, உனா-டெல்லி, சென்னை-மைசூர் ஆகிய இடங்களில் இயக்கப்பட்டன.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் தொழில்நுட்ப விவரங்கள்:
* இந்த வந்தே பாரத் ரயிலை மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயக்க முடியும், அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்க முடியும்.
* ரயில் ஓட்டத்தின் போது, ரயில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும். * இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் உள்ளன, அவற்றில் 7 சேர் ஏசி கோச் மற்றும் ஒரு எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கோச் உள்ளன.
* ஒவ்வொரு பெட்டிகளையும் தயாரிக்க சராசரியாக ரூ.65 கோடி செலவாகும்.
* ரயிலில் உள்ள அனைத்து கதவுகளும் தானாகவே திறந்து மூடப்படும், ஒரு கதவு திறந்திருந்தாலும் ரயிலை இயக்க முடியாது. தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டால், தானியங்கி சேவையிலிருந்து கதவை அகற்றலாம்.
* ரயில்கள் பொதுவாக இயந்திரத்தின் இழுவைத் திறனால் இயக்கப்படுகின்றன. ஒரு சக்கரம் அல்லது பிரேக் செயலிழந்தால் ரயிலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் ரயிலின் வேகம் குறைகிறது.
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலின் முக்கிய அம்சங்கள்:
வந்தே பாரத் ரயிலில் இருக்கை ஏற்பாடு
* ஏசி சேர் கார் கோட்டில் 3 இருக்கைகள் உள்ளன, அதே நேரத்தில் எக்ஸிகியூட்டிவ் ஏசி சேர் கார் கோச்சில் 2 இருக்கைகள் இருக்கும்.
* எட்டு கோச்களில் மொத்தம் 508 இருக்கைகள் உள்ளன, இதில் எக்ஸிகியூட்டிவ் கோச்சில் 52 இருக்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியுடன் கூடிய 44 இருக்கைகள் மற்றும் ஒவ்வொரு சாதாரண பெட்டிகளிலும் 78 இருக்கைகள் உள்ளன.
* வாட்டர் பாட்டில் ஹோல்டர், செல்போன் சார்ஜர், யு.எஸ்.பி போர்ட், உணவு தட்டு, இருக்கைக்கு மேலே தனி குறைந்த ஒளி சென்சார் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன
* மேலும், லக்கேஜ் ரேக்குகள், ரயில் பெட்டி மற்றும் கழிவறைக்குள் அவசரகால தீ எச்சரிக்கை, தீயை அணைக்கும் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், பெட்டி எண் , டிஜிட்டல் ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் ரயில் வேகம், அடுத்த ரயில் நிலையம், ஒலிபெருக்கி வசதி, அலாரம் வசதி உள்ளிட்ட தகவல் பலகை அறிவிப்பு அனைத்து பெட்டிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு பெட்டியிலும் மருத்துவ உதவி உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு ரயில் என்ஜின் டிரைவர் மற்றும் காவலரிடம் பேசும் வசதியும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
* இந்த வசதிகளை தவறாக பயன்படுத்தினால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
* கழிப்பறை வசதிகள் குறித்து இந்திய கழிப்பறை, வெஸ்டர்ன் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை என 3 வகைகள் உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை மிகவும் விசாலமானது மற்றும் பல்வேறு வசதிகளுடன் உள்ளது.
* கைக்குழந்தையுடன் உள்ள பெண்கள் அவசரமாக கழிப்பறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் பட்சத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக உட்காரும் வகையில் இருக்கை வசதியும் உள்ளது.
* பார்வையற்றோர் வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் தேவையான இடங்களில் பிரெய்லி எழுத்துகள் கொண்ட அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
முன்பதிவு மற்றும் கட்டண விவரம்: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலை முதல் துவங்கியது. டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய, தொடங்கிய சில நிமிடங்களிலேயே விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டன. பின்னர், முன்பதிவு செய்யப்பட்டவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகின்றனர்.
கட்டண விவரம்: * மதுரை-விருதுநகர்: சேர் கோச் ரூ.380, எக்ஸிகியூட்டிவ்-ரூ.705
* மதுரை-நெல்லை: சேர் கோச் -ரூ.545, எக்ஸிகியூட்டிவ் ரூ.1055
* மதுரை-திண்டுக்கல்: சேர் கார் கோச் -ரூ.545, எக்சிகியூட்டிவ் ரூ. .965
* மதுரை-திருச்சி: சேர் கார் கோச்- ரூ.665, எக்சிகியூட்டிவ்-ரூ.1215
* மதுரை-விழுப்புரம்: சேர் கார் கோச் - ரூ.955, எக்சிகியூட்டிவ்- ரூ.1790
* மதுரை-தாம்பரம்: சேர் கார் கோச்- ரூ.1385, எக்சிகியூட்டிவ் - ரூ.2475
*மதுரை-சென்னை: சேர் கார் கோச்- ரூ.1425 , எக்ஸிகியூட்டிவ்-ரூ.2535 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.