/tamil-ie/media/media_files/uploads/2019/08/theft-nellai12121133-1565609738.jpg)
cctv footage, attempt theft near nellai, old couples courageous activity, சிசிடிவி கேமிரா, நெல்லை தம்பதி, கொள்ளையர்களை விரட்டிய தம்பதி
வீட்டுக்குள் நுழைந்த திருடர்களை, தம்பதி செருப்பு, பக்கெட்.. பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசியெறிந்து துணிச்சலுடன் விரட்டி அடித்த சம்பவம், நெல்லைச்சீமையின் வீரத்தை பறைசாற்றுவதாக உள்ளது.
நெல்லை மாவட்டம், கடையத்தை அடுத்த கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகவேல் - செந்தாமரை. வயதான இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சண்முகவேல் வீட்டில் மொபைல்போனை பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 திருடர்கள்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். இருவருமே கர்சீப்பால் முகத்தை கட்டயிருந்தனர். அதில் ஒருவர், திடீரென சண்முகவேல் பின்பக்கமாக வந்து கழுத்தை துணியால் இறுக்கி சுற்றி கொலை செய்த முயற்சித்தார்.
கழுத்தை இறுக்கியதில் சண்முகவேல் அலறி சத்தம் போடவும், உள்ளிருந்து செந்தாமரை வந்துவிட்டார். இதை பார்த்து பதறிய அவர், கீழே கிடந்த செருப்பு, பிளாஸ்டிக் சேர், பக்கெட் போன்றவற்றை எடுத்து அந்த திருடர்கள் மீது வீசினார். இன்னும் என்னென்ன கையில் கிடைத்ததோ அதை எல்லாம் எடுத்து அவர்கள் முகத்தில் தூக்கி அடித்து துணிச்சலுடன் விரட்டினார்.
இந்த பொருட்கள் மேலே விழுந்ததும் திருடர்கள் தடுமாறினர் கொள்ளையர். இந்த சமயத்தில் சுதாரித்துக் கொண்ட சண்முகவேலுவும், அவர்களின் பிடியிலிருந்து விலகி வந்து தன் அவரும் திருடர்களை தாக்க துவங்கினார். இதை திருடர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் கொலை செய்யும் முயற்சியை விட்டுவிட்டு, செந்தாமரை அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
வயதான இந்த தம்பதிகளின் உயிருக்கு ஆபத்துஏதும் இல்லை.. என்றாலும் இவர்கள் யார்? கொள்ளை அடிக்க வந்தார்களா? அல்லது கொலை செய்ய வந்தார்களா என்று தெரியவில்லை. என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
இந்த சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
போலீஸ் அறிவிப்பு : திருநெல்வேலி மாவட்டம், கடையம் காவல் நிலைய குற்ற எண் 233/19 u/s 394 IPC வழக்கில் மேலே கண்ட நபர்கள் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களது உடல் அமைப்பு மற்றும் அடையாளங்களை வைத்து, தகவல் கிடைக்கபெறின் உடனே தெரிவிக்கவும்.. கடையம் காவல்நிலையம் 04634240432....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.