திருடர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு விருது – முதல்வர் நாளை வழங்குகிறார்

Nellai couple : பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் இவர்களது வீரச்செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

nellai, nellai couple, thieves, CM palanichamy, award, shanmugavel, senthamarai, நெல்லை தம்பதி, திருடர்கள், முதல்வர் பழனிசாமி, விருது, சண்முகவேல், செந்தாமரை
nellai, nellai couple, thieves, CM palanichamy, award, shanmugavel, senthamarai, நெல்லை தம்பதி, திருடர்கள், முதல்வர் பழனிசாமி, விருது, சண்முகவேல், செந்தாமரை

நெல்லை மாவட்டம், கடையத்தை அடுத்த கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகவேல் – செந்தாமரை. வீட்டுக்குள் நுழைந்த திருடர்களை, இந்த தம்பதி செருப்பு, பக்கெட்.. பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசியெறிந்து துணிச்சலுடன் விரட்டி அடித்த சம்பவம், நெல்லைச்சீமையின் வீரத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

பக்கெட், செருப்பு உள்ளிட்டவைகளை கொண்டு இந்த தம்பதி, திருடர்களை விரட்டியடித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் இவர்களது வீரச்செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை வந்தனர் நெல்லை தம்பதி : சென்னை வந்த சண்முகவேல் – செந்தாமரை தம்பதி, சென்னை தலைமைச்செயலகத்தில் பொதுத்துறை அரசு சிறப்பு செயலாளர் மைதிலியை சந்தித்தனர்.

முதல்வர் விருது வழங்குகிறார் : நாளை நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில், முதல்வர் பழனிசாமி, இந்த தம்பதிக்கு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nellai couple cm palanichamy award

Next Story
பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த புவிசார் குறியீடு! பழனிக்கே கிடைத்த பஞ்சாமிர்தம்palani panchamirtham gets geographical indication - பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த புவிசார் குறியீடு! பழனிக்கே கிடைத்த பஞ்சாமிர்தம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com