நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் கணவர் சன்னாசி உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/uma-300x200.jpg)
கடந்த ஜூலை 23ம் தேதி நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் உட்பட 3 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இஞ்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்து இருந்தது. இது சம்பந்தமான விசாரணையில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் பெயர் துவக்கத்திலேயே அடிபட ஆரம்பித்தது. ஆனால் அதனை அவர் உடனடியாக மறுத்தார். "உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர்.. அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. அதனால உண்மையான குற்றவாளியை மட்டும் தப்ப விட்டுடாதீங்க" என்று கூறினார். இப்படி சீனியம்மாள் சொல்லிய மறுநாளே, வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
கார்த்திகேயன் வாக்குமூலம் : "முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியால் என் அம்மா சீனியம்மாள் அரசியலில் வளரவே முடியாமல் போய்விட்டது. எங்க அம்மா வாழ்க்கையே அழிந்து போய்விட்டது.. எனக்கு சின்ன வயசில் இருந்தே உமா மகேஸ்வரியை தீர்த்து கட்டணும்னு வெறி. அதுக்குதான் அவங்களை கொலை செய்தேன். 3 பேரும் செத்துட்டாங்க.. வீடு முழுக்க தடயங்களை அழித்தேன்.. என் உடம்பில் ரத்தக்கறைகள் இருந்தது. அதனால் நான் பாத்ரூம் போய் குளிச்சுட்டுதான் அங்கிருந்து கிளம்பினேன்.. போற வழியில்தான் என் அம்மாவுக்கு தகவல் சொன்னேன். அவங்க பதறிட்டாங்க" என்று வாக்குமூலம் தந்திருந்தார்.
இதனிடையே, இது சம்பந்தமாக அடுத்து வேறு எந்த தகவலும் பெரிய அளவில் வெளிவரவே இல்லை. ஆனாலும் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை அதிதீவிரமாகவே விசாரித்து வந்தனர். இந்நிலையில், உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் சன்னாசியையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
"என் அம்மாவுக்கு இந்த கொலை பற்றி தெரியாது என்று கார்த்திகேயன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதேபோல, நான் ஏன் அந்தம்மாவை கொல்ல போறேன்" என்றும் கூறியிருந்த நிலையில், சீனியம்மாள் கணவருடன் கைதாகி உள்ளது பெரிய திருப்பத்தை இந்த வழக்கில் ஏற்படுத்தி உள்ளது.