நான்காம் தலைமுறையின் கீழ் இருட்டுக்கடை! சூடுபிடிக்கும் அல்வா விற்பனை

தரத்திலும் சுவையிலும் சமரசமே கிடையாது என்கிறார் புதிதாக கடையை மேற்பார்வையிடும் ஹரி சிங் பேரன்

Nellai Irukttukadai halwa shop opened after 20 days
Nellai Irukttukadai halwa shop opened after 20 days

Nellai Irukttukadai halwa shop opened after 20 days : மாற்றத்தையே காணாத மரச்சட்டங்கள், அதற்கு பின்னே ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்ப், விளம்பர பலகையும் இல்லாத கடை தான் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா. தென்னிந்திய இனிப்பு வகைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பதார்த்தமாகவே இருக்கும் இந்த கடை அல்வாவை தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் கொரோனா நோய் தொற்றால் ஒரு மாபெரும் இழப்பை சந்தித்தது இக்கடை.

மேலும் படிக்க : நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் திடீர் தற்கொலை: கொரோனா உறுதி ஆனதால் விபரீதம்

ராஜஸ்தானில் இருந்து வந்த வட இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே உள்ள இடத்தில் இந்த இனிப்பு கடையை துவங்கினர். ஹரி சிங் இந்த கடையை நடத்தி வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் 25ம் தேதி அவர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாநகராட்சி அக்கடையை அடைக்க கூறி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. 19 நாட்களுக்கு பிறகு நேற்று ஹரிசிங்கின் மகள் வழிப் பேரனான சூரஜ் சிங் கடையை திறந்து விற்பனையை மேற்பார்வையிட்டு வருகிறார். தரத்திலும் ருசியிலும் எப்போதும் சமரசம் இல்லை என்று கூறியுள்ளார் சூரஜ் சிங்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nellai irukttukadai halwa shop opened after 20 days

Next Story
சென்னையில் குறையும் கொரோனா; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்coronavirus positive cases decline in chennai, greater chennai corporation, covid-19 patients discharge increased in chennai, கொரோனா வைரஸ், சென்னை, சென்னையில் குறையும் கொரோனா வைரஸ் தொற்று, சென்னையில் அதிகரிக்கும் கொரோனா டிஸ்சார்ஜ், coronavirus positive cases decreasing in chenai, chennai news, chennai coronavirus news, tamil nadu latest coronavirus news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com