/indian-express-tamil/media/media_files/2025/05/03/24cNsC78Wl6HvodlQGgg.jpg)
Nellai Iruttukadai Ownership Dispute
இருட்டுக்கடை உரிமை விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது மூன்றாவதாக உரிமைகோரிய பிரேம் ஆனந்த் சிங் கடைக்கு உரிமை கோர முடியாது என நயன் சிங் மறுப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கு முன் நெல்லை டவுனில் இருட்டுக்கடையை தொடங்கியவர் கிருஷ்ணசிங். அவருக்கு பின் அவரது மகன் பிஜிலிசிங் கடையை நடத்தி வந்தார். இவர் 2000ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இவர்களுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது மனைவி சுலோச்சனாபாய் ஊழியர்களை கொண்டு கடையை நடத்தி வந்தார்.
சுலோச்சனாபாய் சகோதரர் ஜெயராம்சிங் கடையை நடத்த அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சுலோச்சனாபாய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்து விட்ட நிலையில், இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஜெயராம்சிங் மகளான கவிதா சிங் இருட்டுக்கடை உரிமையை கைப்பற்றி நடத்தி வருகிறார்.
இதனிடையே கவிதா சிங் சகோதரரர் நயன்சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த கடைக்கு உரிமை கோரி நாளிதழில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பின் அடிப்படையில் தொடர்ந்து மூன்றாவதாக பிரேம்மானந்த் அந்த கடைக்கு உரிமை கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அந்த கடையினுடைய உரிமையாளராக இருக்கக்கூடிய கிருஷ்ண சிங்கினுடைய அண்ணன் பேரனான தனக்கும் அந்த கடையில் முழு உரிமை இருப்பதாக பொது அறிவிப்பு ஒன்றை கொடுத்திருந்த நிலையில், தற்போது நயன் சிங் மறுப்பு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
அதில், அந்த வகையில் இருட்டுக்கடையை நீண்ட நாள் நிர்வகித்து வந்த கிருஷ்ணமசிங்கிற்கும் அவரது அண்ணன் பேரனான பிரேமானந்த சிங்கிற்கும் வியாபாரம் ரீதியிலான தொடர்புகள் நீண்ட நாட்களாகவே இல்லை என்ற நிலையில் உறவு அடிப்படையில் உரிமை கூறுகிறார். வேறு எந்த சம்பந்தமும் இருட்டு கடையோடு அவருக்கு இருந்ததில்லை, என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இருட்டுக்கடை உரிமை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் உரிமை கோரும் நிலையில், அந்த கடை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.