Advertisment

நெல்லை கல்குவாரி விபத்து… 8 நாள் போராட்டம்… சிக்கிய 6ஆவது நபர் மீட்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக மீட்புப் பணி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெல்லை கல்குவாரி விபத்து… 8 நாள் போராட்டம்… சிக்கிய 6ஆவது நபர் மீட்பு

நெல்லை கல்குவாரி விபத்து ஏற்பட்ட பகுதியில், 8 ஆவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நிலையில், தீவிர போராடத்திற்கு பிறகு 6 ஆவது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Advertisment

நெல்லையில் அடைமிதிப்பங்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14 அன்று நடந்த விபத்தில், 300 அடி பள்ளத்தில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பாறையில் இடிபாடுகளில் சிக்கி மீதமுள்ள 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த மூன்று பேரின் உடலை கண்டுபிடித்த நிலையில், 4 ஆவது நபரின் சடலத்தை கண்டறிவது கடினமானது. அந்நபரின் பெயர் ராஜேந்தரன் என்றும், அவர் ஒரு டிரக் ஓட்டுநர் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.குமார் கூறியதாவது, " தீவிர போராட்டத்திற்கு பிறகு, ராஜேந்திரன் உடலை மீட்பு படையினர் கைப்பற்றினர். அவரது உடல் டிரக் கேபினுக்குள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடலை பாதுகாப்பான முறையில் மீட்க, லாரி கேபினை உடைத்து மீட்டனர்.

மீட்புப் பணியில் ஹைட்ராலிக் ரேம், ஹைட்ராலிக் ஜாக், ஏர்லிஃப்டிங் பை உட்பட பல உபகரணங்களை உபயோகித்தனர். ஆனால், இந்த உபகரணங்களை வைத்து, அதிகபட்சமாக 20 டன் எடையுள்ள பாறைகளை மட்டுமே தூக்க முடியும். எனவே, 40 முதல் நூறு டன் வரை எடையுள்ள பாறைகளை வெடி வைத்து தகர்த்தினோம்" என்றார்.

6 வது நபரான ராஜேந்திரன் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment