கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தி பரவசத்தில் ஆடிய நெல்லை துணை வேந்தர்!

இசைக்கு ஏற்றபடி  உற்சாகமாக நடனமாடிய காட்சிகள்

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர்  கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடனம் ஆடிய சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லை துணை வேந்தர்:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாஸ்கர் பொறுப்பேற்ற பின்பு அதிரடியாக பல திட்டங்கள் பல்கலைக்கழகத்தில்   அமலுக்கு வந்து சர்ச்சைகள் வெடித்தன. தேர்வு கட்டணம் அதிகரிப்பு, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதக்கூடாது என உத்தரவு பலவற்றை கூறலாம்.

இப்படி ஒருபுறம் இருக்க, மறுபுறம் இவரின் நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை பலரும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். இந்நிலையில் நெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் கலந்து கொண்டார்.

அப்போது அவர், இசைக்கு ஏற்றபடி  உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close