/indian-express-tamil/media/media_files/RNi3uEkRmx9swd5FhtHm.jpg)
Nellaiappar temple car festival stopped
திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்தத் தேர் காணப்படும்.
இந்நிலையில், நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா ஜூன் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
நெல்லை மாவட்டத்திற்கு தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் திருநெல்வேலி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
‘ஓம் நமச்சிவாயா’ என்னும் கோஷமிட்டுப் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இந்நிலையில், எதிர்பாரதவிதமாக வடம் பிடித்து இழுக்கத் தொடங்கிய சில வினாடிகளிலேயே தேரின் 3 வடங்கள் அடுத்தடுத்து அறுந்து கிழே விழத் தொடங்கியது.
இதனால் தேர் எங்கும் நகல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர் வடம் அறுந்தது தொடர்பாக பாஜக, இந்து முன்னணியினர் அபசகுனம் என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வடம் பிடித்து இழுக்கத் தொடங்கிய சில வினாடிகளில் தேரின் 3 வடங்கள் அடுத்தடுத்து அறுந்து கிழே விழத் தொடங்கியது. இந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.#tamilnewspic.twitter.com/QXklY0PMi8
— Indian Express Tamil (@IeTamil) June 21, 2024
இதையடுத்து கோயில் ஊழியர்கள் மாற்று வடம் கொண்டு வந்து தேரில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மூன்றாவது முறையாக தேர் வடம் அறுந்தது...
— Nellai Nagarajan (@pt_nagarajan) June 21, 2024
தேர் அறுந்த வடங்கள் மாற்றப்பட்டு 3 வடங்களுடன் இழுக்கப்பட்ட தேர் நிலையத்தில் இருந்து 100 அடி சென்ற நிலையில் மீண்டும் மத்தி வடம் அறுந்தது... pic.twitter.com/wbBIY4YT2D
இதுகுறித்து அங்கிருந்த பக்தர்கள் கூறுகையில், ‘தேரின் வடம் மிக பழமையாக இருக்கிறது. ஏற்கெனவே அறுந்து போக கூடிய நிலைமையில் இருநத்தை தான் மாற்று ஏற்பாடு செய்து மாற்றி இருக்கிறார்கள். இதை மாற்றக் கோரி பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றனர்.
தேர் இழுக்க தொடங்கிய சில வினாடிகளிலேயே வடம் அறுந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.