தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். யானையை (பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம்) சாய்ச்சிடணும் என்ற கோடு வேர்டுடன் இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் பலருக்கும் தொடர்பிருப்பது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்த கொலை வழக்கில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கிடம் என்பவர் மட்டும் போலீசாரல் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மீதமுள்ள 24 சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகிறார்கள். அந்த வகையில், மொட்டை கிருஷ்ணன் - மோனிஷா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும், மொட்டை கிருஷ்ணன் - மோனிஷா இடையே பணப்பரிவர்த்தனை நடந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் பணப்பரிவர்த்தனை செய்ததாக வெளியான தகவலுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் பணப்பரிவர்த்தனை செய்ததாக வெளியான தகவலுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணன் உடன் பணப்பரிவர்த்தனை என்பது முற்றிலும் தவறான தகவல் என இயக்குனர் நெல்சன் மனைவி வழக்கறிஞர் மோனிஷா விளக்கம் அளித்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை சிலர் பரப்புவதாக இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா குற்றம் சாட்டியுள்ளார். வழக்கறிஞர் கிருஷ்ணன் உடன் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு மோனிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவது தனக்கும் தனது கணவரான நெல்சனின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் என்று மோனிஷா தெரிவித்துள்ளார். மேலும், தவறான செய்திகளை வெளியிட்டவர்கள் அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மோனிஷா, தொடர்ந்து தகவல்களைப் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.