மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 இந்திய மொழிகள் மற்றும் இந்திய அறிவு அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்தக் கொள்கையானது "இந்தியத் தன்மையில் வேரூன்றியது மற்றும் தாய்மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது" என்று தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இதையும் படியுங்கள்: 364 பேருக்கு ப்ளூ காய்ச்சல்.. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அவசரநிலை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“தேசியக் கல்விக் கொள்கை 2020 இந்திய மொழிகள் மற்றும் இந்திய அறிவு அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. திருவள்ளுவர் போன்ற ஒரு ஐகான், வேறு எந்த இலக்கியவாதி, அறிஞர் அல்லது தத்துவஞானிகளுக்கும் குறைவானவர் அல்ல. திருவள்ளுவரின் தத்துவம் மற்றும் இந்திய அறிவு அமைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வது நமது கடமை” என்று தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியத் தன்மையில் வேரூன்றி தாய்மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் என்பதை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார், என தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேசியக் கல்விக் கொள்கையை வெளியிடுவதில் அது ஒரு ‘ஜோதியாக’ மாற வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்கு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்தார்.
"இந்திய நெறிமுறைகளில் அதன் எதிர்காலக் கண்ணோட்டம் மற்றும் வேரூன்றிய கொள்கை மற்றும் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உலகளாவிய குடிமக்களை உருவாக்குவதற்கான ஒரு தத்துவ ஆவணமாகும்" என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
தமிழ்நாட்டின் செழுமையான கலை மற்றும் கலாச்சாரத்திற்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பழங்காலத்திலிருந்தே கலை, கட்டிடக்கலை, இசை, கற்றல் மற்றும் பிற துறைகளில் அதிசயங்களை உருவாக்கிய சமூகமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறினார்.
“ஒடிசாவைப் போலவே தமிழ்நாடும் கட்டிடக்கலையின் சிறப்பிற்கும் கம்பீரத்திற்கும் ஒரு உருவகம். பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவர்,” என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
செழுமையான தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் நினைவாக ஒரு இருக்கையை மோடி நிறுவினார் என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
"இது ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரதத்தை முன்னேற்றுவதற்கான ஒரு படி" என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
விமர்சன சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன்களை தாய்மொழி மூலம் திறம்பட வளர்க்க முடியும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
“நீண்ட காலனியாதிக்கத்தின் காரணமாக, இந்திய மொழிகளையும் வளமான மொழி மரபுகளையும் புறக்கணித்துவிட்டோம். நாம் நமது மனதைக் காலனித்துவத்திலிருந்து விடுவிக்க வேண்டும், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும், மேலும் உயரங்களை அடைய நமக்கான பாதையை உருவாக்க வேண்டும்" என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil