பாஜக பாசிச ஆட்சி ஒழிக என ட்விட்டரில் டாப் ட்ரெண்ட் : திருநெல்வேலியில் நடைபெற இருந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மார்க்கமாக பயணம் மேற்கொண்டார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் சோபியா என்ற மாணவியும் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சோபியா தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்து “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டார். அதனைத் தொடர்ந்து சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைப்பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க
கருத்துரிமையை நெறிக்கும் வகையில் பாஜக கட்சி செயல்படுகிறது என்றும், எழுத்தாளர்கள், இடது சாரி சிந்தனையாளர்கள் என தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்றும் #Fascist_BJP என்ற கேஷ்டேக்குகள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகி வருகிறது.
பாஜக பாசிச ஆட்சி ஒழிக ட்விட்டர் ட்ரெண்ட்