ஹேராம் கமல் இல்லை விஸ்வரூபம் கமல். இதில் எந்த கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற கருத்தை கூறியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற கமலின் பேச்சு பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது. அரசியல் தலைவர்களில் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில், சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கமலை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும், அது மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தான் என்று கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனான நான், அவரது கொலை குறித்து கேள்வி கேட்கப்போவதாகவும் கமல் கூறியிருந்தார்.
ஹேராம் படத்தில் சாகேத் ராம் கேரக்டரில் நடித்திருப்பார் கமல்ஹாசன். பிராமணரான கமல், அம்ஜத் அலிகான் என்ற இஸ்லாமியருடன் இணைந்து அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருப்பார். பின் இருவரும் பிரிந்துவிடுவர். சாகேத் ராமின் கொலை செய்யப்படுவாள். அவளது கொலைக்கு மகாத்மா காந்தியே காரணம் என நண்பர்கள் கூற, பிராமணர் வேசத்தை கலைத்து, காந்தியை கொல்ல துணிவார். காந்தியை கொல்ல முயலும்போது நாதுராம் கோட்சேவின் குண்டுகளுக்கு காந்தி இரையாகிவிடுவார். பின் காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தி பயன்படுத்திய காலணிகளை பத்திரமாக பாதுகாப்பது போன்று படம் முடியும்.
கமலின் இந்து தீவிரவாதி விவகாரத்தால், மக்கள் ஹேராம், நாதுராம் கோட்சேவின் படம், அவர் குறித்த தகவல்களை இணையதளங்களில் அதிகமாக தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
கமலுக்கு, பா.ஜ. நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.வி. சேகர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளாவது,
கமல் ஹாசன். சொந்த காசில் சூன்யம்.. வீரமணி காதில் சொல்லவேண்டியது. மைக் போட்டு சொல்லிட்டாரு. அரசியல் விஷம் என்று அவர் குரிப்பிட்டுள்ளார்.
கமல் ஹாசன். சொந்த காசில் சூன்யம்.. வீரமணி காதில் சொல்லவேண்டியது. மைக் போட்டு சொல்லிட்டாரு. அரசியல் விஷம்.
— “CHOWKIDAR”????????S.VE.SHEKHER (@SVESHEKHER) 13 May 2019
இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, இது போன்ற முட்டாள் தனமான பேச்சுகளை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம். நீங்கள் திரையுலகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை. மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது போன்றவற்றை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள் என்று காயத்ரி ரகுராம் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நாதுராம் கோட்சே என்பவர் இந்து தீவிரவாதி என்று எடுத்துரைக்கும் தாங்கள், தங்களது ஹேராம் படத்திலேயே இதுகுறித்து சொல்லாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
கோட்சே தீவிரவாதி என்பது தங்களுக்கு இப்போது தான் தெரியுமா என்றும் வினவியிருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தலில் கோட்சே குறித்து எதுவும் தெரிவிக்காத தாங்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அரவக்குறிச்சி தொகுதியில் இந்த கருத்தை சொல்ல தங்களை யார் நிர்பந்தப்படுத்தியது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.