நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா. உயர் நீதிமன்றம், விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த பாதை வழியாக ஊர்வலம் செல்வோம் என்று கூறினார் ஹெச்.ராஜா. இதற்கு மறுப்பு கூறிய காவல்துறையினர், உயர் நீதிமன்ற உத்தரவினை கையில் காட்டினார்கள்.
இதனை கண்ட ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தை மிகவும் கொச்சையாக வசைபாடியதோடு மட்டுமின்றி தமிழக காவல் துறையினரையும் மிகவும் தரக்குறைவாக பேசினார். இதனால் காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சியுற்றனர். அவர் பேசிய வீடியோ நேற்றிரவில் இருந்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க : உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய ஹெச்.ராஜா
அவரின் இந்த செயலுக்கு அவர் மீது கண்டனங்கள் தெரிவிக்கும் வகையிலும் கைது செய்யக் கோரியும் நெட்டிசன்கள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.