உச்ச நீதிமன்றம் கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நிதிபதிகளை நியமனம் செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உள்பட 54 நீதிபதிகள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் கூடுதலாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் செய்யபட்ட நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி ஆகிய 10 நீதிபதிகளின் பெயர்களுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உள்பட 54 நீதிபதிகள் பணி செய்து வருகின்றனர். 10 நீதிபதிகல் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"