Advertisment

12 மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தில் கொரோனா பதிவு: சென்னை, கோவையில் அதிகம்

சென்னையில் 102 புதிய வழக்குகளும், கோயம்பத்தூரில் 68, செங்கல்பட்டு 34, சேலத்தில் 30, திருப்பூரில் 36, கன்னியாகுமரியில் 27 மற்றும் திருவள்ளூரில் 22, என்று 12 மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

author-image
WebDesk
New Update
covid

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் எண்ணிக்கை, கடந்த வாரம் வரை 519ஆக பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 509 ஆக குறைந்துள்ளது.

Advertisment

மேலும், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நபர்களின் எண்ணிக்கை 3,676இல் இருந்து, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 3,671 ஆக குறைந்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த 66 வயது முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் 102 புதிய வழக்குகளும், கோயம்பத்தூரில் 68, செங்கல்பட்டு 34, சேலத்தில் 30, திருப்பூரில் 36, கன்னியாகுமரியில் 27 மற்றும் திருவள்ளூரில் 22, என்று 12 மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment