தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது இன்றி அமையாத சூழ்நிலையாக மாறி வருகிறது. இதனை தடுப்பதற்கும் நகரத்தை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், மெட்ரோ பணிகள் என்று மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், பொதுமக்கள் தமிழக அரசு கொடுக்கும் இந்த வசதிகளை சாலை விதிகளை பின்பற்றி பயன்படுத்துகிறீர்களா என்பது கேள்விக்குறியே.
சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தாலும், அதற்கு ஈடாக சாலை விதிகளை பின்பற்றாமல் விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இதனை தடுப்பதற்கு போக்குவரத்து காவல் துறை, சாலை விதிகளை மேம்படுத்துதல், பள்ளி மாணவர்கள் மூலம் சாலை நெறிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று பல்வேறு திட்டங்கள் தொடங்கினர்.
இதை தொடர்ந்து, தற்போது சென்னை சாலைகளில் விதிமீறல்களை மேற்கொள்ளும் வாகனங்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவற்றை போட்டோ அல்லது வீடியோ பிடித்து, 90031 30103 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil