Tamilnadu news in tamil: கோயம்பத்தூர் மற்றும் மதுரைக்கு தமிழக அரசின் டீலக்ஸ் மற்றும் ஏ/சி பேருந்துகள் மூலம் பயணம் செய்வோர்க்கு, தி.நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை மற்றும் பிராட்வே போன்ற இடங்களில் புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு இருந்து இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளால் சென்னை நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கென்று புதிய புறநகர் பேருந்து நிலையம், வண்டலூரை அடித்த கிளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, இந்த மாத இறுதியில் செயல்பட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கோயம்பத்தூர் மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கு தமிழக அரசின் டீலக்ஸ் மற்றும் ஏ/சி பேருந்துகள் (எஸ்.இ.டி.சி) மூலம் செல்ல, கோயம்பேடு அல்லது தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். தற்போது இந்த நகரங்களுக்கு செல்ல தமிழக அரசின் 6 எஸ்.இ.டி.சி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக அடையார், வேளச்சேரி, மற்றும் டைட்டில் பார்க் போன்ற இடங்களில் புதிய பேருந்து நிறுத்தங்கள் அமையவுள்ளன.
அதோடு தூத்துக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்கு தமிழக அரசின் 3 எஸ்.இ.டி.சி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இன்று திங்கள்கிழமை முதல் தி.நகரில் இருந்து இரவு 7 மணி முதல் 10 மணி வரை இயக்கப்பட உள்ளன. சைதாப்பேட்டை, ஆலந்தூர் மற்றும் குரோம்பேட்டை போன்ற இடங்களில் பேருந்துக்கான நிறுத்தத்தங்கள் அமைப்பட்டு உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:New board for setc bus to coimbatore and madurai from velachery and t nagar tamil news
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்