/indian-express-tamil/media/media_files/2025/06/11/ItMxKZTl962V4Heile6Y.jpg)
சென்னை, வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் வணிக பயன்பாட்டை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நகரின் முக்கிய பகுதியான வடபழனியில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில், 6.65 ஏக்கர் பரப்பளவில் பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
பேருந்து முனையம்: நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இதில் அமைக்கப்பட இருக்கிறது. இது பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக வளாகம்: இந்த வணிக வளாகம் 10 தளங்கள் வரை கார்ப்ரேட் அலுவலகங்கள், ஓய்வறைகள் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.
கேமிங் மற்றும் அனிமேஷன் மையங்கள்: 11 மற்றும் 12 ஆகிய தளங்கள், அனிமேஷன், கேமிங் மற்றும் காமிக்ஸ் போன்ற துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
உணவு மையம்: பேருந்து முனையத்தின் 5-வது தளத்தில் ஒரு உணவு மையம் அமைக்கப்பட உள்ளது.
சூரிய சக்தி பயன்பாடு: இந்த கட்டடத்தின் மாடியில் சோலார் பேனல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மின்சார செலவை குறைப்பதாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த திட்டம், வடபழனியை ஒரு முக்கிய போக்குவரத்து மற்றும் வணிக மையமாக மாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.