Advertisment

சிலிண்டர் முதல் டாஸ்மாக் வரை; இன்று முதல் புதிய மாற்றங்கள்; முழு விபரம் இங்கே

வணிக சிலிண்டர் விலை உயர்வு; டாஸ்மாக் விலை உயர்வு; வீட்டு கடன்களில் மாற்றம்; இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன?

author-image
WebDesk
New Update
sbi fastag news, sbi fastag online, sbi fastag how to get online, எஸ்.பி.ஐ. ஃபேஷ்டேக்

வணிக சிலிண்டர் விலை உயர்வு; டாஸ்மாக் விலை உயர்வு; வீட்டு கடன்களில் மாற்றம்; இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிப்ரவரி மாதம் தொடங்கி உள்ள நிலையில், ஒன்றாம் தேதி முதல் பல்வேறு மாற்றங்களை நாம் எதிர்கொள்கிறோம். சிலிண்டர், வங்கி கடன், பாஸ்டாக், பணப்பரிமாற்ற விதிகள், டாஸ்மாக் என பல்வேறு அம்சங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் விபரங்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றப்படும். அந்த வகையில் பிப்ரவரி 1 ஆம் தேதி வீடு மற்றும் வணிக சிலிண்டர்கள் விலை மாற்றி அமைக்கப்படும். தற்போதைய நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. அதேநேரம் வணிக சிலிண்டர்கள் விலை 12.50 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SBI வீட்டுக் கடன் விதிகள்

எஸ்.பி.ஐ வங்கியின் வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் சலுகைகள் மீதான விதிகள் இன்று முதல் மாறி உள்ளன. உண்மையான அட்டை விகிதம் (Actual Card Rate) விகிதத்தை விட 65bps வரையில் குறைவாக கடன் சலுகைகளைப் பெறலாம். இந்த சலுகையானது, ஃப்ளெக்ஸிபே (Flexipay), என்.ஆர்.ஐ (NRI), சம்பளம் இல்லாதவர்கள் மற்றும் அபோன் கர் (Apon Ghar) ஆகிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். இருப்பினும், இந்த வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களின் சிபில் (CIBIL) ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும்.

IMPS பணப்பரிமாற்ற விதிகள்

ஐ.எம்.பி.எஸ் மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்கு பணம் அனுப்புவதற்கான, ​​விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரே மொபைல் எண்ணை வைத்து பல்வேறு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்படுவதால், புதிய விதிகளை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) கொண்டு வருகிறது. இந்த புதிய விதிகள் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு இடையே ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக பணம் அனுப்பினால், பழைய முறை பின்பற்றலாம். அதுவே, வங்கிக் கணக்குகளுக்கு இடையே ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பணப்பரிமாற்றம் செய்தால், பெறுநரின் மொபைல் எண் மற்றும் வங்கியின் பெயரைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்த பணப்பரிமாற்ற விதிகளானது இன்று முதல் (பிப்ரவரி 1ஆம் தேதி) முதல் அனைத்து வங்கிகளிலும் பின்பற்றப்படுகிறது.

NPS திரும்பப் பெறுதல் விதி

தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension Scheme) பென்ஷன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புதிய விதியை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதியின்படி மொத்த டெபாசிட் தொகையில் இருந்து 25 சதவீதத்திற்கு மேல் பணத்தை எடுக்க முடியாது. முன்னதாக உயர் கல்வி, திருமணம், குடியிருப்பு வீடு வாங்குதல் மற்றும் மருத்துவச் செலவுகள் போன்ற நோக்கங்களுக்காக பகுதியளவு டெபாசிட்டை திரும்பப் பெறலாம் என்று PFRDA அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பான்கார்டு

பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் இந்த மாதம் கொண்டு வரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல், சிறிய சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்யும் வசதிகள் உள்ளன. அதை மாற்ற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இனி பான் கார்டுகளை அனுமதி பெற மட்டுமே விண்ணப்பிக்க பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பாஸ்டாக்

தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு பாஸ்டாக்' (One Vehicle One FasTag) என்ற முறை இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. FasTag மாற்றங்களை செய்ய ஜனவரி 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. இதன் மூலம் KYC முழுமையடையாத பாஸ்டாக்குகள் இன்று முதல் வேலை செய்யயாது. ஒரு வாகனத்திற்கு இனிமேல் ஒரு FasTag மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரே பாஸ்டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை இன்று முதல் (பிப்ரவரி 1) அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pan Card Gas Cylinder
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment