மதுரை மாநகராட்சி முதல் பெண் மாநகராட்சி ஆணையாளராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சியில் 2024 பிப்., 2ல் பொறுப்பேற்ற கமிஷனர் தினேஷ்குமார் மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் தற்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையராக தமிழக மின் ஆளுமை துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த இவர், 2019 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. திருச்சி, தர்மபுரியில் சப் கலெக்டராக இருந்தார்.
ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநராகவும் இருந்தார். 1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான பிறகு, தற்போது முதல் பெண் கமிஷனராகவும், 71வது கமிஷனராகவும் சித்ரா விஜயன் பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது மாவட்ட ஆட்சியராக சங்கீதாவும் மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்தம் வரிசையில் தற்போது மதுரை மாநகராட்சிக்கு ஒரு பெண் ஆணையாளராக இருப்பது பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
தற்போது மதுரை மாநகராட்சி பெண்கள் வசமானது. ஆட்சியராக சங்கீதாவும் மேயராக இந்திராணி பொன்வசந்தம் மற்றும் ஆணையாளராக சித்ரா விஜயன் ஆகியோர் பொறுப்பில் உள்ளனர்.