தமிழகத்தில் புதிதாக 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 335 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்து தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2.31 லட்சமாக உள்ளது. திங்கட்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி 63,101 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
புதிய பாதிப்புகள் மற்றும் இறப்புகள் இரண்டின் வளர்ச்சியுமே சுழன்று வருகிறது. ஒவ்வொரு 1 லட்சம் புதிய பாதிப்புகளுக்கும் 1000 இறப்புகள் பதிவாகிறது. உதாரணமாக, டிசம்பர் 22 அன்று 12,000 இறப்பு எண்ணிக்கை இருந்த நிலையில், மேலும் 1,000 இறப்பு பதிவாக 115 நாட்கள் ஆனது. ஆனால் 13,000 லிருந்து 14,000 ஆக (ஏப்ரல் 30 அன்று) 14 நாட்கள் மட்டுமே ஆனது.
ஒரு வாரத்திற்கு பிறகு மே 7 அன்று, எண்ணிக்கை 15,000 ஐத் தாண்டியது, நான்கு நாட்களுக்குப் பிறகு, மே 11 அன்று, மாநிலத்தில் 16,000 க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்பிறகு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் 1,000 இறப்புகள் பதிவாகி 18000 ஐ தாண்டியுள்ளது.இதேபோல் தொற்று பாதிப்பும் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் 1 லட்சம் அதிகரிக்கும். ஏப்ரல் 19 அன்று 1 லட்சம் வழக்குகளைச் சேர்த்து 10 லட்சத்தை எட்ட 112 நாட்கள் ஆனது. ஏப்ரல் 27 அந்த எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது. அடுத்த 17 நாட்களில், 15 லட்சத்தையும் (மே 14 அன்று), அதன் பின்னர் மூன்று நாட்களில் 16 லட்சத்தையும் தாண்டியது.
சென்னையில் திங்கட்கிழமை 6,150 புதிய பாதிப்புகள் பதிவானது. சனிக்கிழமை(6,640) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை(6,247) ஒப்பிடும்போது பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை 46,367 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை அந்த எண்ணிக்கை 48,156 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் அதிக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 3,264 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் மே 1ஆம் தேதி 7,288 ஆக இருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை திங்கட்கிழமை நிலவரப்படி 24,195 ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16,907 ஆக கோயம்புத்தூரிலும், 16,681 ஆக சென்னையிலும அதிகரித்துள்ளது. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் மே 1 ல் 205 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 1574 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மாநிலத்தில் 2, 125 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 1,412 ஆக இருந்தது. தாமதமான பரிசோதனை, மருத்துவமனை சேர்க்கை, மருத்துவ வசதி கிடைக்காதது மற்றும் வைரஸ் பிற நோய் பாதிப்பு காரணங்களால் இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் தவிர அனைத்து மாநிலங்களும் இறப்பை பதிவு செய்துள்ளன.சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக செங்கல்பட்டில் 33 பேரும், திருவள்ளூரில் 20 பேரும் உயிரிழந்தனர்.
இது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் கோவிட் நோயாளிகளை அனுமதிக்காத சுயநிதி மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெரும்பாலான மாவட்டங்களில் ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கை வசதி 90% சதவீதம் நிரம்பியுள்ளது.