Rain in Tamil Nadu Expected Due to Low Depression at Bay of Bengal: வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வி நிலை அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் தாக்கிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று புயலாகவும், 12-ம் தேதி தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில்,
“ இந்திய வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக, தெற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் தெற்கு வங்கக் கடம் மற்றும் அதனையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிக்கு 3 நாட்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலையே இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பில்லை. ” எனத் தெரிவித்தார்.