தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஃபீஞ்சல் புயலாக வலுப்பெற்று மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே சமீபத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பின்னும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை பெய்தது. இன்னும் அந்த மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து மீளவில்லை.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் நாளை (டிச.7) புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை வரும் 9ஆம் தேதி நெருங்கும் என்றும், அதன்பிறகு வரும் 12ஆம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.
இதன் காரணமாக வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“