/indian-express-tamil/media/media_files/2025/04/30/lxoZUTxPwSxnvq9WHQOR.jpg)
காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு சங்கர மடம் செயல்பட்டு வருகிறது. 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், காஞ்சி சங்கர மடத்தின் 71 இளைய மடாதிபதியாக சத்திய சந்தேரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, இளைய மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அட்சய திருதியை நாளான இன்று , காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சன்னியாச ஆசிரம தீட்சையை பெற்றுக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, காமாட்சி அம்மன் கோயிலின் பஞ்ச கங்கை தீர்த்தத்தில் சாளக்கிரமத்தை தலையில் சுமந்து, சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு சந்தேரசேகரேந்திர சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்தின் 71- வது இளைய மடாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் சந்யாச தீட்சை வழங்கும் விழாவிற்கு நேரில் சென்று பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி.
— Nainar Nagenthiran (@NainarBJP) April 30, 2025
பழமை வாய்ந்த சங்கர மடத்தின்… pic.twitter.com/IlRnxYiuFC
இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.