புதிய மின் இணைப்புகளுக்கான ஒப்புதல் செயல்முறையை சீரமைக்கும் முயற்சியாக, சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் உட்பட முக்கியமான மின் வாரிய மையங்களில் மொபைல் செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிய முடிவு ஒன்றை லண்டன் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பெயரில் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தமிம்நாடு மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 நிறுவனங்களாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத் திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி, 12 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட மின்சுமையை மூன்று முறை மீறும் வீட்டு நுகர்வோர் கூடுதல் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மின் பயன்பாட்டாளருக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே மின்சார லோடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்தப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் அனுமதிக்கப்பட்ட மின்சுமை 8kW ஆகவும், அதைத் தாண்டி 10kW பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். ஒருமுறை லோடு கூடினால் சிக்கல் இல்லை. ஆனால், ஒரு வருடத்தில் மூன்று முறை 10kW-ஐத் தொட்டால், 10kW உங்கள் இணைப்பு சுமையாக நிர்ணயிக்கப்படும். இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சமீபத்திய கட்டணத்தின்படி 1 கிலோவாட் மூன்று கட்ட இணைப்புக்கான மேம்பாட்டுக் கட்டணங்கள் ரூ. 5,110 மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ. 950/கிலோவாட் ஆகும். இந்த அளவைத் தாண்டும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், புதிய மின் இணைப்புகளுக்கான ஒப்புதல் செயல்முறையை சீரமைக்கும் முயற்சியாக, சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் உட்பட முக்கியமான மின்வாரிய மையங்களில் மொபைல் செயலியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பணம் செலுத்தத் தவறியவர்களை விரைவாகக் கண்டறியவும், துண்டிப்புச் சேவைகளை நிர்வகிக்கவும், மீட்டர் சேதம் அல்லது பழுதுபார்க்கவும், நுகர்வோர் குறைகளைக் கையாளவும் முடியும். புதிய இணைப்புகளை வேகமாக கொடுக்க முடியும்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 3.3 கோடி மின் நுகர்வோருக்கு சேவை அளித்தாலும், டாங்கெட்கோவிடம் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை. தாமதமின்றி உடனடி மற்றும் திறமையான சேவைகளை உறுதி செய்ய, டிஜிட்டல் செயலிகளை பயன்படுத்துவது அவசியம். இதை கருத்தில்கொண்டே, இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி தற்போது 15,000 இணைப்புகளை உள்ளடக்கிய 12 பிரிவு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் மே அல்லது ஜூன் மாதத்தில் மதிப்பீடு செய்யப்படும்.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், மற்ற பிரிவு அலுவலகங்களுக்கு அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.