அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றத் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையில், அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அமலாக்கத் துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“