Advertisment

குயின் வெப் சீரிஸுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு

தமிழகத்தில் டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New petition seeking ban on Queen Web Series, petition seeking ban to queen web series, jayalalitha life based web series, குயின் வெப் சீரிஸுக்கு தடை கோரி மனு, சென்னை உயர் நிதிமன்றம், petition submit in Madras High Court, ஜெயலலிதா வாழ்க்கை, petition submit seeking ban to queen web series, madras high court

New petition seeking ban on Queen Web Series, petition seeking ban to queen web series, jayalalitha life based web series, குயின் வெப் சீரிஸுக்கு தடை கோரி மனு, சென்னை உயர் நிதிமன்றம், petition submit in Madras High Court, ஜெயலலிதா வாழ்க்கை, petition submit seeking ban to queen web series, madras high court

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 27,30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் என்ற இணையதள தொடர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்ட திரைபடத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

தற்போது தேர்தல் நியாயமாகவும் வெளிபடை தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 9 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும் அந்த கோரிக்கை மனுவை பரீசீலித்து குயின் இணையதள தொடர் வெளியிட தடைவிதிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கு முன்பு தலைவி திரைப்படத்துக்கும் குயின் வெப் சீரிஸுக்கும் தடை கோரிய ஜெ.தீபாவின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

Tamilnadu Jayalalithaa Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment