நவம்பர் 14ஆம் தேதி கோட்டயம் ரயில் நிலையத்தில் புதிய சபரிமலை யாத்திரை மையம் திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இந்த மையம், 900 யாத்திரிகர்கள் பாதுகாப்பாக தங்குவது போல் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
யாத்திரை மையத்தில் தங்குவதற்காக பதிவு செய்யும் முதல் கட்டம் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டம் ஆனது டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சபரிமலை யாத்திரைக்கு மக்கள் சென்று பூஜிக்கும் வழிமுறைகள் யாவையும் ஜனவரி 14 ஆம் தேதி முடிவடையும்.
சபரிமலை கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் மக்களுக்காக கேரளாவில் உள்ள கோட்டயம் ரயில் நிலையத்தில் புதிய யாத்திரை மையத்தை இந்தியாவின் இளைய வெளியுறவுத்துறை அமைச்சர் வி முரளீதரன் திறந்து வைத்தார்.
இதன் மூலம் புனித தளத்திற்கு செல்லும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாதிரிகர்களின் வசதிக்காக கோட்டயம் ரயில் நிலைய வளாகத்தில் இருந்து KSRTC பேருந்து சேவைகள் இயக்கப்படும்.
புதிய யாத்திரை மையம் தளங்களின் அறிமுகம், சபரிமலையில் கூட்ட நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கான புதிய மல்டி லெவல் பார்க்கிங் வசதி, கருப்பொருள் விளக்குகளுடன் கூடிய தனித்துவமான கேரள பாரம்பரிய முகப்பு மற்றும் கோட்டயத்தில் பல்வேறு பயணிகள் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் பல திட்டங்களை தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil