தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் சாலைகளுக்கும் தெருக்களுக்கும் தேசத் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், முதல்வர்கள், தமிழ் பற்றாளர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமான ஒன்றாகும்.
ஏற்கனவே, மறைந்த முன்னாள் முதல்வர்களான, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோர் பெயர்களில் நகர்கள் மற்றும் வீதிகள் உள்ளன.
தற்போது இந்த வரிசையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் புதிய நகர் ஒன்று உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அமைந்துள்ளது தோப்புப் பாளையம் என்ற பகுதி. அங்கு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய குடியிருப்பு பகுதி உருவாகியுள்ளது. அந்த பகுதிக்கு தான் எடப்பாடி பழனிசாமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாடு கோவிட் 19 சிகிச்சைக்கு பலனளிக்கிறதா – நிபுணர்கள் சொல்வது என்ன?
நேற்று நடைபெற்ற திறப்பு விழாவில் பங்கேற்ற பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் ”எடப்பாடியார் நகர்” என்று பெயர் சூட்டப்பட்ட அந்த குடியிருப்பு பகுதியை திறந்து வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil