ஸ்ரீரங்கம், மயிலம், சோளிங்கர் என முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு சோதனை முறையில் புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “எண் 12291/12292 யஸ்வந்த்பூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - யஸ்வந்த்பூர் வாராந்திர விரைவு ரயில் வாலாஜா சாலை நிலையத்தில் நின்று செல்லும். யஸ்வந்த்பூரில் இருந்து வரும் ரயில் செப்டம்பர் 15 முதல் அங்கும், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் ரயில் செப்டம்பர் 16ம் தேதியிலிருந்தும் நின்று செல்லும்.
எண் 12635/12636 சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு விரைவு ரயில் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் ஸ்ரீரங்கம் நிலையத்தில் நின்று செல்லும்.
எண் 12653/12654 சென்னை எழும்பூர் - திருச்சி - சென்னை எழும்பூர் ராக் ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் கல்லக்குடி பழங்காநத்தம் நிலையத்தில் நின்று செல்லும்.
எண் 12691/12692 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 15 முதல் சோளிங்கர் நிலையத்திலும், ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்திலிருந்து வரும் ரயில் செப்டம்பர் 16 முதல் அங்கேயும் நிற்கும்.
எண் 16115/16116 சென்னை எழும்பூர் - புதுச்சேரி - சென்னை எழும்பூர் டெய்லி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 16 முதல் மயிலம் நிலையத்தில் நின்று செல்லும்.
எண் 16127/16128 சென்னை எழும்பூர் - குருவாயூர் - சென்னை எழும்பூர் டெய்லி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 16 முதல் ஆரல்வாய்மொழி நிலையத்தில் நின்று செல்லும்.
எண் 16175/16176 சென்னை எழும்பூர் - காரைக்கால் - சென்னை எழும்பூர் டெய்லி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 16 முதல் கடலூர் துறைமுக நிலையத்தில் நின்று செல்லும்.
எண் 16179/16180 சென்னை எழும்பூர் - மன்னார்குடி - சென்னை எழும்பூர் டெய்லி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் கொரடாச்சேரி நிலையத்தில் நின்று செல்லும்.
எண் 12867/12868 ஹவுரா - புதுச்சேரி - ஹவுரா வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவண்ணாமலை நிலையத்தில் நின்று செல்லும்.
ஹவுராவில் இருந்து வரும் ரயில் செப்டம்பர் 17ம் தேதி முதல், புதுச்சேரியில் இருந்து வரும் ரயில் செப்டம்பர் 20ம் தேதி வரை அங்கு நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.