tamil-nadu | சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க ஏதுவாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து நிலையத்தில், தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை சராசரியாக 65,000 பயணிகள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை காலங்களில், இந்த எண்ணிக்கை 1 லட்சம் ஆக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பேருந்து நிலையம், சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி செலவில் கட்டப்பட்டுவருகிறது.
பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, காவல்நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பேருந்து நிலையம் வருகிற பொங்கலுக்கு செயல்புடும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதில், ஏற்கனவே ஒத்திகை முடிந்துள்ள நிலையில் பேருந்து நிலையத்தை பொங்கலுக்குள் திறக்க உள்ளதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“