சிதம்பரம் அருகே கொத்தட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பேருந்துகளை பயன்படுத்திய பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சாலையில் சிதம்பரம் - கடலூர் இடையே உள்ள கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இன்று முதல் டிச. 23 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி கடலூர் மாவட்ட தனியார் பஸ், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் டோல்கேட் இன்று திறக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தட்டை சுங்கச்சாவடி திங்கள்கிழமை முறைப்படி திறக்கப்பட்டு, முதல் காருக்கு தேங்காய் உடைத்து படைத்து சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் இனிப்புகள் வழங்கி கொத்தட்டை சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தானியங்கி டோல்கேட் பணியை அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.
சுங்கச்சாவடி திறப்பு விழாவில் சிதம்பரம் டிஎஸ்பி டி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், கொத்தட்டை டோல்கேட் நிர்வாக அதிகாரி, பாண்டிச்சேரி ப்ராஜெக்ட் டைரக்டர் சக்திவேல் ஆகியோர் சுங்கச்சாவடியை திறந்து வைத்தனர்.
டோல்கேட் நிர்வாகம் இவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு தானியங்கி முறையிலும், பாஸ்ட் ட்ராக் இல்லாத வாகனங்களுக்கு மேனுவல் முறையிலும் வசூல் தொகையை வசூலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் அமைப்பினர் இன்று ஒரு நாள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அனைத்துக் கட்சி சார்பாக சிதம்பரம் கொத்தட்டை டோல்கேட் இருந்து சீர்காழி அரசூர் வரை உள்ள டோல்கேட் நிர்வாகத்தில் பணிகள் நிறைவடையாத நிலையில், டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் சர்வீஸ் ரோடுகளை பணிகள் நிறைவடையாத நிலையில், தற்போது டோல்கேட்டை திறந்து கட்டணம் வசூலித்து வருவதாக மக்கள் கூறினர்.
இந்நிலையில் டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொத்தட்டை கிராமப் பகுதியை சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம் நடக்க இருக்கிறது .
இதனால் இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று கடலூர் - சிதம்பரம் வரை இன்று காலை முதல் தனியார் பேருந்துகள் இயக்கவில்லை.
இதனால் பள்ளி செல்லும் மாணவ - மாணவிகள், அரசு, தனியார் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வந்த நிலையில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தால் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
மிகுந்த சிரமத்தைக் கிடையே இந்தப் போராட்டம் அறிவித்த நிலையில், கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.