Advertisment

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல்: பயப்படத் தேவையில்லை - தமிழக அரசு உறுதி

சிங்கப்பூரில் புதிய வகை கோரோனா தொற்று பரவல் தொடங்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை என்று டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் கூறினார்.

author-image
WebDesk
New Update
omicron - unsplash (1)

சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை என்று பொதுமக்களுக்கு டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் உறுதியளித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகத்தின் இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். இது பீதியை ஏற்படுத்தாத லேசான தொற்று என்று கூறினார். சிங்கப்பூரில் புதிய வகை கோரோனா தொற்று பரவல் தொடங்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

Advertisment

சிங்கப்பூரில் உருமாறிய புதிய வகை கொரொனா வைரஸ் தொற்று ஒமிக்ரான் துணை வகை கே.பி. 2 (KP.2) ஏற்கெனவே இந்தியாவில் சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் 290 KP.2 மற்றும் 34 KP.1 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. எந்தச் சூழலையும் கையாள்வதற்குத் தேவையான உள்கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு மாநிலம் முழுவதும் தடுப்பூசி போட்டுள்ளது என்றும் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள புதிய கோவிட் அலையானது ஒரு லேசான தொற்று என்றும், தமிழ்நாட்டில் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது என்றும் உயர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் (டி.பி.எச்.பி.எம்) இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், சிங்கப்பூரில் புதிய கோவிட் தொற்று பரவல் தொடங்கியதைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் கோவிட் தொற்று நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

“கடந்த சில வாரங்களாக, சிங்கப்பூர் போன்ற தெற்காசிய நாடுகளில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எங்களைப் பொறுத்த வரையில், எந்த பயமும் தேவையில்லை... சிங்கப்பூரில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று  கேபி.2. ஓமிக்ரானின் துணை வகை இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளது” என்று டாக்டர் செல்வவிநாயகம் கூறினார்.

சிங்கப்பூரில் உருமாறிய புதிய வகை கொரொனா வைரஸ் தொற்று ஒமிக்ரான் துணை வகை கே.பி. 2 (KP.2) ஏற்கெனவே இந்தியாவில் சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் 290 KP.2 மற்றும் 34 KP.1 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

டி.பி.எச்.பி.எம் ஆல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், டாக்டர் செல்வவிநாயகம் இந்த புதிய வகை கொரோனா தொற்று இதுவரை லேசான தொற்றுநோயை மட்டுமே தருகிறது, இதுவரை கடுமையான தொற்று எதுவும் பதிவாகவில்லை என்று கூறினார்.

“அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுவதுமாக தடுப்பூசி போட்டுள்ளோம். அதனால், நோய்த்தொற்று ஏற்பட்டாலும், அது லேசான வடிவமாக இருக்கும் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையில்லை.” என்று டாக்டர் செல்வவிநாயகம் கூறினார்.

இருப்பினும், எந்தவொரு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மற்றும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.  மற்றபடி, யாரும் பீதியடையத் தேவையில்லை என்று டாக்டர் செல்வ விநாயகம் கூறினார். 

மேலும், “கோவிட், மற்ற காய்ச்சலைப் போலவே, தற்போது சுவாச நோய்த்தொற்றாக மாறிவிட்டது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அலைகள் கூட வர வாய்ப்புள்ளது, ஆனால், பீதி அடையத் தேவையில்லை. போதிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எந்த சூழ்நிலையிலும், தொற்று நோயை எதிர்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது.” என்று டாக்டர் செல்வவிநாயகம் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment