திருமணமான 22 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்த புது மாப்பிள்ளை!

பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவர்களின் குடும்ப உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By: July 20, 2020, 2:35:26 PM

Newly married man dies in Stanley hospital due to coronavirus : திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.  அவருக்கு சமீபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறி இருந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் படிக்க : மனநலம் பாதித்த தாய்… தேநீர் கடையில் பணியாற்றும் தந்தை; +2 தேர்வில் சாதித்த இரட்டையர்கள்!

தொடர்ந்து அவருடைய உடல்நிலை மோசம் அடைந்த சூழலால் மூச்சு திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவர்களின் குடும்ப உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Newly married man dies in stanley hospital due to coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X