Advertisment

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் மரணம்: இபிஎஸ், தமிழிசை, ஸ்டாலின் இரங்கல்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேரில் சென்று கோசல்ராம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News 7 editor Kosalram passed away

Kosalram : நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் நேற்று இயற்கை ஏதினார். கடந்த சில வருடங்களாகவே இருதய கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை கவலைக்கிடம் ஆகவே சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்க இயலாத காரணத்தால் நேற்று இரவு அவர் மரணம் அடைந்தார்.

Advertisment

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகில் உள்ள மயிலப்பப்புரம் கிராமத்தில் பிறந்த கோசல்ராம் தமிழக ஊடகத்துறையில் ஒரு தவிர்க்க முடியாத ஊடகவியலாளராக பணியாற்றினார். விகடன், குமுதம், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் போன்ற செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அவர் 2018ம் ஆண்டு முதல் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அஞ்சலிக்கு வைக்கப்படும் கோசல்ராம் உடல்

அஞ்சலிக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 06-04-2021 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி வரை வைக்கப்படுகிறது என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதி தமிழன் அறிவித்துள்ளார்.

தலைவர்கள் இரங்கல்கள்

ஈடு செய்ய முடியாத இழப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறைந்த பத்திரிக்கையாளர் கோசல் ராம் மரணம் குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் திரு.கோசல்ராம் அவர்களது மறைவை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 6, 2021

முக ஸ்டாலின் இரங்கல்

”தினபூமி, தினகரன், தமிழ் முரசு, விகடன் போன்ற நாளிதழ்களிலும், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களிலும் முக்கிய பணியாற்றிய அவர் "நம்ம அடையாளம்" என்ற பத்திரிகையையும் தொடங்கி சிறப்பாக நடத்தியவர். புலனாய்வு இதழியலில் சிறந்து விளங்கினார். இறுதியாக நியூஸ்7 செய்தி தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதயநோயால் அவதிப்பட்டு வந்த அவர், 49 வயதில் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

பத்திரிக்கை துறைக்கு பேரிழப்பாகும்

தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய இரங்கல் செய்தியை வெளியியுள்ளார். அதில் பத்திரிக்கை துறைக்கு கோசல்ராம் மரணம் மிகப்பெரிய பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.

தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று தன்னுடைய இரங்கலை கோசல்ராமின் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வாக இருந்தபோது பாசமிகு இந்த இதயம் தன்னை கோசலிடமிருந்து மாற்ற வேண்டாமென தானாக நிறுத்திக்கொண்டதோ என்று வேதனையுடன் தன்னுடைய இரங்கலை பதிவு செய்திருக்கிறார்.

விழுப்புரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தன்னுடைய இரங்கல்களை பதிவு செய்துள்ளார்.

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu S Kosalram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment