news in tamil covid news : கொரோனா பயம் அரசியல் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை என்பது தான் உண்மை. திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் மரணம் இதற்கு மிக முக்கிய காரணம் எனலாம். பாதுக்காப்பான மாஸ்க், சமூக இடைவெளி என அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலும் கொரோனா தொற்று வீரியம் சற்று வேகமாக உள்ளது. வரும் முன் காத்தல் என்பதே சிறந்தது.
கொரோனா தடுப்பு களபணியில் ஈடுப்படும் அமைச்சர்களும் கொரோனா தொற்று டெஸ்ட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்துக்கின்றனர். அந்த வகையில், கொரோனா டெஸ்ட் எடுத்த அரசியல் தலைவர்களின் லிஸ்ட் இதோ.
1. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அதன் பின்பு முதல்வர் தனது குடும்பத்துடன் கொரோனா டெஸ்ட் செய்துக் கொண்டார். கூடவே, முதல்வரின் வீட்டு பணியாளர்கள், காவலர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அனைவரின் ரிஸலட்டும் நெகட்டிவ் தான்.
2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துக் கொண்ட கொரோனா சோதனை முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அவருக்கும் கொரோனா இல்லை என உறுதியானது.
3. 20 நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா சோதனை செய்துக் கொண்டார். அவரின் ரிசல்ட் நெகடிவ். அதே நேரம், ஜெ.அன்பழகனின் இறப்புக்கு பிறகு கட்சி நிர்வாகிகள் அனைவரையும் பரிசோதனை செய்துக் கொண்டு கவனமாக இருக்கவும் ஸ்டாலின் அறிவுருத்தினார்.
4. தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சென்னைக்கு வந்து, திரும்பி கோயம்புத்தூர் செல்லும் போதெல்லாம் கொரோனா சோதனை செய்துக் கொள்கிறார். கடைசியாக 1 வாரத்திற்கு முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்து இருக்கிறார். அனைத்து டெஸ்டிலும் அவரின் ரிசல்ட் நெகட்டிவ் தான்.
மது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க!.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க!
5. மின் வாரிய துறை அமைச்சர் தங்கமணி கடந்த 3மாதங்களில் மொத்தம் 5 முறை கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார். அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கடைசியாக 1 வாரத்திற்கு முன்பு டெஸ்ட் எடுத்திருக்கிறார். மிகவும் கவனமாக கொரோனா சவால்களை எதிர்கொண்டு வருவதாக தங்கமணி கூறுகிறார்.
6. தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதுவரை எடுத்த 3 கொரோனா சோதனையிலும் அவரின் ரிசல்ட் நெகடிவ்.
7. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வாரந்தோறும் தூத்துக்குடி டூ பெங்களூர் பயணம் மேற்கொள்கிறார். அதனால், இதுவரை 3 முறை தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். தனக்கு கொரோனா இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
8. தனது மொத்த குடும்பத்தையும் கொரோனா டெஸ்ட்-க்கு உட்படுத்திய வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த், தனது தந்தையான திமுக எம்.எல். ஏ துரைமுருகனுக்கும் கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
9. முன்னாள் சைதை மேயர் மா.சுப்ரமணியின் தனது உடலை பேணிக்காப்பதில் அதிக கவனம் செலுத்துபவர். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என ஆரோக்கியமான செயல்முறைகளை பின்பற்றும் சுப்ரமணியன் தனது கொரோனா டெஸ்ட்டின் ரிசல்ட் நெகடிவ் என்கிறார்.
10. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி 1 மாதத்திற்கு 3 முறை கொரோனா பரிசோதனை செய்துக் கொள்கிறார். விஜயதாரணிக்கு கொரோனா இல்லை என்பது அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil