news in tamil today : இந்தியாவில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறப்பு. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புதுச்சேரியில் திரையரங்குகள் திறப்பு.
தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்காக, திமுக தேர்தல் அறிக்கை, 2021-ல் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளை, நேரிலோ, அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ பகிரலாம் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் கருத்தே தேர்தல் அறிக்கையாகவும், அந்த அறிக்கையை நாளைய ஆட்சியாக மாற்றுவோம் என தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாள் இன்று. ”இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம். அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” - பிரதமர் மோடி ட்வீட்.
Tributes to Dr. Kalam on his Jayanti. India can never forget his indelible contribution towards national development, be it as a scientist and as the President of India. His life journey gives strength to millions. pic.twitter.com/5Evv2NVax9
— Narendra Modi (@narendramodi) October 15, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today: அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அமமுக பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் கொரோனாவுக்குப் பலியாகியிருப்பது பெருந்துயரமாகும். மூப்பனார் மூலம் அறிமுகமான நாளிலிருந்து இதுநாள் வரையில் எம்முடன் கொண்ட நட்புறவைப் பேணி போற்றியவர். அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடுகிற யாவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் தெரிவித்தார்.
பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வெற்றிவேல் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அவர்சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்தார்.
அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்!
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட மருந்து ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை இம்மாதம் 28.10.2020
முதல் 06.11.2020 தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.P.வெற்றிவேல் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது. அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
இது போல் ஒரு காதல் கதையை இன்றைய சூழலில் சொல்ல மிகப் பெரும் ஆசை ! #16yearsof7grainbowcolony @thisisysr @Arvindkrsna #NAMUTHUKUMAR pic.twitter.com/rvBM5YmwUo
— selvaraghavan (@selvaraghavan) October 15, 2020
7/ஜி ரெயின்போ போல் ஒரு காதல் கதையை இன்றைய சூழலில் சொல்ல மிகப் பெரும் ஆசை என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலையை பாதுகாக்க @dmk_youthwing & மாணவரணி சார்பில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிறுவன், கைதுக்கு அஞ்சாது - காவல்துறையில் பெயர் கொடுத்தான்!
திமுகவில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும்.#SaveAnnaUniversity #DMK#DMK4TN #எல்லோரும்நம்முடன் pic.twitter.com/OvJep8qR9T
— #DMK4TN (@DMK4TN) October 15, 2020
கழகப்பொருளாளர் என் அருமை நண்பர் திரு. P.வெற்றிவேல் Ex.MLA மறைவு செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன் – ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் என்று அம்முக கட்சித் தலைவர் டிடிவி. தினகரன் தனது இரங்கலை தெரிவித்தார்.
கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…
சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.
நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?
இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.
என்று வைரமுத்து நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கினார்.
திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருக்கும் போது கூட்டணி கட்சிகள் உளவுத்துறையின் தூண்டுதல்களுக்கு பதில் அளித்து ஊடக விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
மாம்பழம், சாத்துக்குடி வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை, லிச்சி, கிவி, அன்னாசி மாதுளை, பலாப் பழம், பேரிக்காய், ஆப்பிள், பாதாம் பழம் போன்ற பழங்களுக்கும் பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளுக்கும் கிசான் சரக்கு ரயில் போக்குவரத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
வோடபோன் நிறுவனத்தின் வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அரசின் அட்டர்னி ஜெனரல் அரசிடம் கருத்துத் தெரிவித்திருப்பதாக சில பிரிவு ஊடகங்களில் ஒரு குழப்பமான செய்திக் கட்டுரை வலம் வருகிறது. இந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது முழுவதும் உண்மையல்ல. அந்த செய்திக்கு அடிப்படை ஆதாரமும் இல்லை. தீர்ப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அமைச்சகத்துக்குள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிகைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்தது.
தில்லியில் 95% காற்று மாசுவுக்கு, உள்ளூரில் ஏற்படும் புகை, கட்டுமான தூசி, குப்பைகள் எரிப்பு ஆகியவைதான் காரணம் என்றும், சுற்றுவட்டார வயல்களில் அறுவடைக்கு பிந்தைய எரிப்பு காரணமாக ஏற்படும் மாசு 4 சதவீதம்தான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து முதல்வர் ஆளுநரிடம் பேசியுள்ளார். ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 40 வயதுக்கு மேற்பட்ட முற்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணி வழங்க இயலாது. மற்ற பிரிவினருக்கு 45 வயது வரை அரசுப்பணி வாய்ப்பு வழங்கப்படும்” என்று கூறினார்.
விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விவசாயிகள் இரவு பகல் பாராமல் உழைத்து விவசாயம் செய்து உணவூட்டி வருகின்றனர். விவசாயிகள் கொண்டுவரும் நெல்மூட்டைகளுக்கு ரூ.40 அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனையானது. அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். மேலும், தமிழகம் முழுவதும் எத்தன கொள்முதல் நிலையங்கள் உள்ளன என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலக ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஊழியர்கள் ஆக்சிமீட்டர்கள், வெப்ப ஸ்கேனர்களை வாங்கி பயன்படுத்துமாறு முதன்மை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்பில் தமிழகத்தில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில், மருத்துவப் படிப்பில், தமிழத்தில் ஓபிஎசி மாணவர்களுக்கு 50% அல்லது 27% இடஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நெல்லையைச் சேர்ந்த வேன் ஓட்டுநருக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி இந்திராணி இயற்கையாக சாகும் வறை சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.314 கோடி என 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி தேவையை பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்று என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு முன்மொழிவு கடிதம் எழுதியது குறித்து தமிழக அரசு விளக்கம் கோரியுள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
காலத்தால் அழியாத அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்.
"கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன். #Abdulkalam pic.twitter.com/JvsVnoXnfm
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 15, 2020
என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்’ கலாமின் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப்படுத்த வேண்டும்
என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.
— Kamal Haasan (@ikamalhaasan) October 15, 2020
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
இந்த ஆண்டு சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை விசிக சார்பில் ஆர்ப்பாட்டம். ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டை பறித்து முன்னேறிய வகுப்பினருக்கு அளித்தது கண்டிக்கத்தக்கது என திருமாவளவன் கருத்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights