Tamil News Today : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர tngasa.in மற்றும் tndceonline.org என்ற இணையதளம் மூலம் 20.07.2020 முதல் 31.07.2020 வரை விண்ணப்ப பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இன்று அவமதிப்பு செய்துள்ளனர். சிலையின் மீது காவி சாயத்தை ஊற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் பதற்றம் உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழுக்கும், தமிழருக்கும் பிரதமர் பெருமை சேர்த்துவிட்டதாக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இனம்,மொழி, நாடு கடந்து அனைத்து தரப்பு மக்களையும் நெறிப்படுத்தும் நூல் திருக்குறள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் , பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இயற்கையுடன் இணக்கமாக வாழும் பழங்கால பாரம்பரியத்தை நாங்கள் கொண்டுள்ளோம். சுத்தத்திற்கான மிகப் பெரிய பிரசாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை நாங்கள் ஊக்குவிக்கவில்லை.
பூகம்பங்கள், புயல்கள், எபோலா நெருக்கடி அல்லது எந்தவித இயற்கை மற்றும் செயற்கை நெருக்கடி ஏற்பட்டாலும், இந்தியா விரைவாகவும், ஒற்றுமையுடனும் செயல்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்திலும், நாங்கள் 150 நாடுகளுக்கு மருத்து மற்றும் இதர உதவி அளித்துள்ளோம்.
- பிரதமர் மோடி
எங்களின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம், 2022ம் ஆண்டில், இந்தியா சுதந்திர நாடாக 75வது ஆண்டை நிறைவு செய்யும்போது, ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வீட்டை பெற உறுதி செய்யும்.
2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கவும் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களின் அளவு மற்றும் வெற்றி, நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இருந்து இதர வளரும் நாடுகளும் கற்றுக் கொள்ள முடியும்.
- பிரதமர் மோடி
உலகிலேயே கொரோனாவிலிருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா உள்ளது
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 150 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறோம்
தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் பாலின சமத்துவத்தை நாங்கள் அடைந்துள்ளோம் - மோடி
ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும்
- பிரதமர் மோடி
’ஐ.நா.வின் ECOSOC உயர்நிலைக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை’
இந்தியாவின் சுகாதார முறைகள், பிற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது
குடிமக்கள் அனைவருக்கும் வீடுகட்டி தரும் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது’
‘கடந்த 6 ஆண்டுகளில் 40 கோடி வங்கிக்கணக்குகளை தொடங்கி வைத்துள்ளோம்’
- பிரதமர் மோடி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளம் மூலம் 20.07.2020 முதல் 31.07.2020 வரை விண்ணப்ப பதிவு செய்யலாம்
* tngasa.in மற்றும் tndceonline.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
* மாணவர் சேர்க்கை குறித்து சந்தேகமிருந்தால் 044-22351014 / 22351015 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் - தமிழக அரசு
* தனியார் கல்லூரிகள் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் - தமிழக அரசு
இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 4.6.2020 அன்று வீரமரணம் எய்திய சேலம் - வெத்தலைக்காரன்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு.மதியழகன் அவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அவரது மனைவி திருமதி.தமிழரசி அவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினேன்.
- முதல்வர் பழனிசாமி
இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 4.6.2020 அன்று வீரமரணம் எய்திய சேலம் - வெத்தலைக்காரன்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு.மதியழகன் அவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அவரது மனைவி திருமதி.தமிழரசி அவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினேன். pic.twitter.com/nkepQVDE2J
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 17, 2020
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி நடுரோட்டில் செய்தியாளர்களை சந்தித்ததாக, சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட, காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ஆம்பூர் நகர போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி -100
ராமநாதபுரம் - 82
சிவகங்கை -81
புதுக்கோட்டை-75
தென்காசி - 65
சேலம் -61
க.குறிச்சி-58
ராணிப்பேட்டை-55
நீலகிரி -52
நாமக்கல் -46
கடலூர்-44
தர்மபுரி -40
திருப்பூர்-28
கிருஷ்ணகிரி-17
திருவாரூர் -15
கரூர்- 12
அரியலூர்-10
பெரம்பலூர் - 9
திருப்பத்தூர் -8
ஈரோடு - 3
நாகை - 2
சென்னை - 1243, மதுரை -263, திருவள்ளூர் - 220, விருதுநகர் -196, தூத்துக்குடி -189, வேலூர்-183, தேனி-175, திண்டுக்கல் - 163, குமரி - 151, தி.மலை - 145, கோவை - 141, செங்கல்பட்டு - 125, நெல்லை -119, தஞ்சை-117, விழுப்புரம்-113, காஞ்சிபுரம் - 110
'வேளாண் பல்கலை.,யில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை'
தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யின் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை
* 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை
கும்பகோணத்தை மாவட்டத் தலைநகரமாக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் கும்பகோணம் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஹோட்டல்கள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கொரோனா பரவல் அதிகமாக உள்ள 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். அதில், சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அப்போது தலைமை செயலாளர் அறிவுரை வழங்குகிறார். காணொலி மூலமாக இன்று மாலை 4.30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
சேலம் மாவட்டம் எடப்பாடியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4685 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37480க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39352 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து 56.60ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ' கட்டும்பணி தொடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் 25% - பள்ளிகள் திறக்கும் போது 25% - பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25% வசூலித்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிகழ்வுக்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்திக்கொள்கிறார்கள்! விழிப்படைவோம்!
— pa.ranjith (@beemji) July 17, 2020
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ தீவிரம் காட்டி வருகின்றனர். காவலில் எடுக்க, வரும் திங்கள் கிழமை சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 5 போலீசாரை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார். ஸ்டாலின் ன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார், அதனால்தான் அவர் பெரியார்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளது. வரும் 20 ம் தேதி முதல் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்றும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகிக்க தடை என உத்தரவிட்டுள்ளது.
5 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த காணொலி மூலம் ஆலோசனை மாலை 4.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் இன்று விசாரனை நடத்துகிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்த நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவுறுத்தல் * 15% அளவுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணுவ வீரரின் மனைவி மற்றும் தாயைக் கொலை செய்த மர்ம நபர்களைப் பிடிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , ராணுவ வீரர் ஸ்டீபன் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ், இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை இந்தியாவிற்கு 18 விமானங்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-நியூயார்க் இடையே தினமும் விமானங்கள் இயக்கப்படும் எனவும், டெல்லி-சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
லடாக்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த நிலையில் ராஜ்நாத் சிங் லடாக் சென்றுள்ளார். லடாக் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடினார். சீனா ராணுவத்தினருடன் 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் ராஜ்நாத் சிங் பயணம் கவனத்தை பெற்றுள்ளது.
சாத்தான்குளம் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார், பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் இல்லை என உடற்கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான விசாரணையை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் அனுமதி
ஐ.நா. அவையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். உயர்மட்டக் குழு கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் உரை இது என்பதால், பல்வேறு சிறப்புக்களை பெற்றுள்ளது.
ரேபிட் கருவிகளை வாங்கி, தனிப்பட்ட நோய் எதிர்ப்பு திறனை பரிசோதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights