news in tamil :சுமைதாங்கியாக படிக்கவைத்து பெற்றோரை ஏமாற்றிய மகனை போலீசார் வசமாக சிக்க வைத்தனர்.
ஐதரபாத்தின் கீசரா பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் சில நாட்களுக்கு முன்பு போலீஸ் அவசர உதவி எண் 100 க்கு அழைத்து தங்கள் மகனை சிலர் கடத்தி விட்டததாகவும், பணம் கொடுத்தால் தான் விடுவதாக கூறி மிரட்டுவதாக பதற்றத்துடன் பேசினர். அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அவர்களின் அவர்களின் மகன் குறித்து முழுமையாக விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் அந்த பெற்றோர்கள் தெரிவித்ததாவது, “ என் மகன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளான். இதற்காக லட்சக்கணக்கில் செல்வாகியது. கடன் வாங்கி என் மகனின் விருப்பப்படி அவனை படிக்க வைத்தோம். படிப்பை முடித்தவுடன் தனக்கு லண்டனில் வேலை கிடைத்து விட்டதாக எங்களிடம் கூறினான்.
அதற்கும் சில லட்சம் செல்வாகும் என்றான். நாங்கள் சொத்தை விற்று அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமண தேதியை குறிக்க அவனை ஜதராபாத் வர சொன்னோம். அப்போது எங்கள் நம்பருக்கு ஃபோன் செய்த எங்கள் மகன் ஆர்.ஜி.ஐ. விமான நிலையம் அருகே டாக்சி டிரைவர் என்னை கடத்தி விட்டதாக கூறி கதறினான்.” என்றனர்.
பின்பு காவல் துறையினர் விவேக்கின் நம்பரை வாங்கி தை ட்ராக் செய்தனர். டிராக் செய்ததில் அவர் சென்னையில் இருப்பதாக காட்டியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சென்னையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் போலீசாருக்கு தெரிய வந்தது. பெற்றோர்கள் கொடுத்த தகவலின் படி அவரின் மகன் லண்டனுக்கு செல்லவில்லை. லண்டனில் வேலை கிடைத்ததாக கூறி சென்னைக்கு தான் வந்து இங்கு இருக்கும் ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.
அவர் கடத்தப்பட்டதாக கூறியதும் நாடகம் என்பதையும் போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர். கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோரை அவரின் மகன் இப்படி ஏமாற்றியது பெற்றோர்கள் கண்களில் ரத்த கண்ணீரை வரவைத்துள்ளது.