Advertisment

TN by-election campaign: 'நான் பாஜகவுடன் பேசவில்லை; பாஜக பற்றி தான் பேசுகிறேன்' - மு.க.ஸ்டாலின்

Tamil Nadu by-election campaign : இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் இந்த இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN by-election campaign

TN by-election campaign

News in Tamil TN by-election campaign: வருகின்ற 19ம் தேதி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் இந்த இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Advertisment

Breaking News Highlights

நாதுராம் கோட்ஸேவை தீவிரவாதி என்று கூறிய கமல் ஹாசன் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கமல் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் விடுதி ஒன்றில் இருக்கும் கமல் ஹாசன் தன்னுடைய வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 2 நாட்களாக அவரின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் : சர்ச்சையை கிளப்பிய கமல்ஹாசனின் கருத்துகள்

Live Blog

Tamil Nadu Breaking News : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்களின் பார்வைக்கு














Highlights

    19:53 (IST)15 May 2019

    News in Tamil : பாஜகவுடன் பேசவில்லை; பாஜக பற்றி பேசுகிறேன் - ஸ்டாலின்

    தமிழிசை கூறுவது போல பாஜகவுடன் பேசவில்லை; பாஜகவின்
    தவறைப் பற்றிதான் பேசுகிறேன்

    - மு.க.ஸ்டாலின்

    17:18 (IST)15 May 2019

    இந்த விளையாட்டுலாம் என்னிடம் வேண்டாம் - கமல்ஹாசன்

    'நான் அரவரக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுவார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் பயங்கரவாதி என கூறவில்லை. இதுபோன்ற விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம். இது வேண்டுகோள் அல்ல, அறிவுரை தான். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். என்னை அவமானப்படுத்த என்னுடைய கொள்கையை கையில் எடுக்காதீர்கள், தோற்றுப்போவீர்கள். மதச் செருக்கு, ஜாதிச் செருக்கு என்று ஜெயிக்காது' - என கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

    16:05 (IST)15 May 2019

    ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் மாற்றம்

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக் கண்ணனுக்கு பதில் வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்படுவதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    15:02 (IST)15 May 2019

    ஐகோர்ட் மதுரை கிளையில் கமல் மனு

    கோட்சே குறித்து கமல் பேசிய விவகாரத்தில், தன மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

    13:47 (IST)15 May 2019

    கமல்ஹாசன் மீது போடப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

    கமல்ஹாசன் மீது பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபத்யாய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்காமல் எதற்காக இங்கு புகார் அளித்தீர்கள் என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளனர் நீதிபதிகள். 

    12:06 (IST)15 May 2019

    இரட்டை இலை வழக்கினை விசாரித்த சிஸ்தனி தலைமைக்கு வழக்கு மாற்றம்

    இரட்டை இலை வழக்கினை விசாரித்த நீதிபதி சிஸ்தனி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது கமல் ஹாசனின் சர்ச்சை பேச்சு மீது போடப்பட்ட வழக்கு. இதற்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் விசாரணைக்கு வர இருந்தது இந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

    11:58 (IST)15 May 2019

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி

    தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது என்று கூறி அந்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

    11:39 (IST)15 May 2019

    Election Results 2019 : மே 23ம் தேதிக்கு தயாராகும் இந்திய தேர்தல் ஆணையம்

    மக்களவை மற்றும் இடைத் தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கைகான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    11:23 (IST)15 May 2019

    மோடி கூறியது சரி தான் - தமிழிசை சௌந்தரராஜன்

    பிரதமரின் கருத்து சரியானது தான். மோடியின் கருத்திற்கு தமிழிசை ஆதரவு. கமல்ஹாசனின் கருத்து தவறானது அதை அவர் நிச்சயம் திரும்பப் பெற வேண்டும் என்றும் தூத்துக்குடியில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

    10:55 (IST)15 May 2019

    கமல் ஹாசனின் சர்ச்சைப் பேச்சுக்கு மோடி பதில்...

    ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் ஒரு இந்துவாக இருக்கவே இயலாது. நடிகர் கமல் ஹாசனின் கருத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில். எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    10:51 (IST)15 May 2019

    MK Stalin Campaign : ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும்

    ஆட்சி மாற்றம் வந்த பிறகு பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்று திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். உறுதிமொழிகளைக் காப்பாற்றுவது பற்றி மட்டுமல்ல, மக்களைப் பற்றியும் கூட மோடி கவலைப் படமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

    10:41 (IST)15 May 2019

    திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்

    கொடைக்கானலில் தங்கியிருந்த கமல் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்திருக்கும் தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், மற்றும் பனையூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை அரவக்குறிச்சியில் வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபடுவார் என்றும் மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ தகவலகளை வெளியிட்டுள்ளது.

    10:36 (IST)15 May 2019

    Kamal Haasan Controversial Speech : இந்துக்களுக்கு எதிரான கருத்து அல்ல - மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர்

    கமலின் கருத்தினை திசை மாற்றி, இந்துக்களுக்கு எதிரான கருத்துகளாக பரப்பி சில கட்சியினர் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    இரண்டு நாட்களாக தலைவர்களின் கருத்து  மோதல்கள் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
    Tamil Nadu Tamil News
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment