News in tamilnadu updates: பிறை தென்பட்டதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி தெரிவித்தார்.
ரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால் அங்கு நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நாள்
தமிழகத்திலும் ஒரு சில முஸ்லிம் அமைப்பினர் ரம்ஜானை நேற்றே கொண்டாடினர். இந்த நிலையில் தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்பட்டதாக நேற்று இரவு அரசு தலைமைக் காஜிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Live Blog
news in tamilnadu : ரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது நாசர், விஷால் அணி.
தலைவர் - நாசர், பொதுச்செயலாளர் - விஷால், பொருளாளர் - கார்த்திக் ஆகியோர் மீண்டும் இந்த பதவிகளுக்கு போட்டி என தகவல்.
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் எம்.பி. மரியாதை. செலுத்தினார்.
#JustIn : சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் எம்.பி. மரியாதை.
* அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை..#JayaMemorial | #AIADMK | #MGRMemorial pic.twitter.com/wjwhsFqkIS
— Thanthi TV (@ThanthiTV) 5 June 2019
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் ரம்ஜான் வாழ்த்துக்கள்
Have a blessed Id-ul-Fitr. pic.twitter.com/71R9GMW3Tf
— Narendra Modi (@narendramodi) 5 June 2019
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரம்ஜான் வாழ்த்து.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் "ரம்ஜான் திருநாள் வாழ்த்து" செய்தி.. #EidMubarak pic.twitter.com/oviv7zLEem
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) 4 June 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights