News in tamilnadu : நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்.. விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இன்றைய நாளின் முக்கிய செய்திகளை லைவ்வாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news today live : விஷால் தரப்பில் மேல் முறையீடு

News in tamilnadu updates: பிறை தென்பட்டதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி தெரிவித்தார்.

ரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால் அங்கு நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நாள்

தமிழகத்திலும் ஒரு சில முஸ்லிம் அமைப்பினர் ரம்ஜானை நேற்றே கொண்டாடினர். இந்த நிலையில் தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்பட்டதாக நேற்று இரவு அரசு தலைமைக் காஜிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Live Blog

news in tamilnadu : ரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்

17:19 (IST)05 Jun 2019
News in tamil : உயர்நீதிமன்ற உத்தரவு!

நீதிபதி தலைமையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி மனு  தமிழக அரசு மற்றும் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

16:39 (IST)05 Jun 2019
Today tamilnadu news: தமிழிசை பேட்டி!

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அடுத்த முறை அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

15:50 (IST)05 Jun 2019
News in tamil : மருத்துவ சேர்க்கைக்கான அரசாணை!

தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான அரசாணை நாளை வெளியாகும்  என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

15:09 (IST)05 Jun 2019
Tamilnadu latest news : ட்வீட்டை நீக்கிய முதல்வர் பழனிசாமி!

தமிழை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற ட்வீட்டை நீக்கினார் முதல்வர் பழனிசாமி! 

14:08 (IST)05 Jun 2019
நடிகர் சங்க தேர்தல்!

துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் போட்டி. செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுகிறார். 

13:56 (IST)05 Jun 2019
Tamilnadu news in tamil: மீண்டும் விஷால் அணி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது நாசர், விஷால் அணி.

தலைவர் - நாசர், பொதுச்செயலாளர் - விஷால், பொருளாளர் - கார்த்திக் ஆகியோர் மீண்டும் இந்த பதவிகளுக்கு போட்டி  என தகவல். 

12:46 (IST)05 Jun 2019
ஆர்.எஸ்.பாரதி கருத்து!

 
இந்தி திணிப்புக்கு எதிராக பெரியார் காலம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது . இருமொழி கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது

12:45 (IST)05 Jun 2019
இந்தி எதிர்ப்பு!

தமிழகத்தில் மூன்று மொழிக்கொள்ளைக்கு  எதிராக திருமாவளவன் கருத்து : நாங்கள் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  இந்தி மொழியை மூன்றாவது மொழியாக தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி வாசல் திறக்கிறார்.

11:48 (IST)05 Jun 2019
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

"கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது.  பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையலாம் . பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

11:09 (IST)05 Jun 2019
Tamilnadu latest news: மெரினாவில் ஓபிஎஸ் மகன்!

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் எம்.பி. மரியாதை. செலுத்தினார். 

10:43 (IST)05 Jun 2019
Modi wishes for ramzan : மோடி வாழ்த்து!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் ரம்ஜான் வாழ்த்துக்கள்

10:39 (IST)05 Jun 2019
News in tamil : முதல்வர் வாழ்த்து!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரம்ஜான் வாழ்த்து.

news in tamil : தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தொழுகைகள் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, தங்கள் அன்பை பரிமாறி கொள்கின்றனர்.

தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே சித்தா படிப்பு

Web Title:

News in tamilnadu today live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close